சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க 75 வது இந்திய சுதந்திர தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடும்

சென்னை, தியாகராய நகரிலுள்ள ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரி வரலாற்றுச் சிறப்பு மிக்க 75 வது இந்திய சுதந்திர தின விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் “இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவசம் அணிந்து” ஆசியா/இந்திய அளவிலான சாதனை நிகழ்ச்சியை (Asia and India Book of Records) 12.08.2022 அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடத்தியது. இந்நிகழ்வில் மாணவர்களை ஈடுபடுத்தியதன் வாயிலாக இக்கல்வி நிறுவனம் சாதனை மிக்க இளைய தலைமுறையினரை உருவாக்கியுள்ளது. இச்சாதனை நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 79 பள்ளிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 75 மாணவர்கள், எமது ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் 3000 மாணவியருடன் இணைந்து, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் உருவம் அச்சிடப்பெற்ற முகக் கவசங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் அணிந்து சாதனை படைத்தனர்.
மொத்தத்தில், 8613 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஆசியா/இந்திய அளவில் பதிவு செய்யும் சாதனை நிகழ்வை தேசபக்தியின் வண்ணமயமான காட்சியாக அமைத்தனர். இச்சாதனை நிகழ்வு குறித்த செய்தியைத் தங்கள் பத்திரிகையில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!

முனைவர் சா.பத்மாவதி
கல்லூரி முதல்வர்