நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாக களமிறங்குகிறார்.

இராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை

பேச்சலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார் உடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் M செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்

.தயாரிப்பு – துவாரகா புரொடக்‌ஷன்ஸ் (பிளேஸ் கண்ணன்)
இயக்கம் – சுரேஷ் சாத்தையா
ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து
இசை – தரண் குமார்
படத்தொகுப்பு – சாபு ஜோசப்
கலை – சுரேஷ் களரி
தயாரிப்பு மேற்பார்வை – அன்பு மோகன் ரத்தினவேலு, K.சக்திவேல்
நடனம் – அசார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)