புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “பெண்டுலம்” படப்பிடிப்பு, பூஜையுடன் இனிதே துவங்கியது !!!
SURYA INDRAJIT FILMS சார்பில் திரவியம் பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும், புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” படத்தின் படப்பிடிப்பு, இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
தமிழ் சினிமாவில் சைக்கலாஜிகல் படங்கள் அரிது அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரையிலும் சொல்லப்படாத புதுமையான திரைக்கதையில், சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமாக “பெண்டுலம்” படம் உருவாகிறது.
அசுரன் படப்புகழ் அம்மு அபிராமி, கோமல் ஷர்மா நடிக்கும் இப்படத்தில் ஶ்ரீபதி, ஶ்ரீகுமார்,T.S.K, விஜித்,FIR ராம், ராம் ஜூனியர் எம் ஜி ஆர் , பிரேம் குமார், கஜராஜ், சாம்ஸ் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதல்முறையாக எட்டு கதாப்பாத்திரங்கள் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் புதுமையான திரைக்கதையில் ஒரு விறுவிறுப்பான திரில்லராக இப்படம் உருவாகிறது.