சேதுபதி நடித்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய, ‘மாமனிதன்’ படம் 4 விருதுகளை பெற்றுள்ளது. 

சிங்கப்பூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி நடித்து, இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய, மாமனிதன்’ படம் 4 விருதுகளை பெற்றுள்ளது. 

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்த படம் ‘மாமனிதன்’. பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு அவரும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்து இருந்தனர்.

இந்தப் படம் கடந்த ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய பாராட்டுக்களை படக் குழுவினருக்குப் பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து ‘ஆஹா’ ஓடிடி தளம் ‘மாமனிதன்’ படத்தை வாங்கி தனது தளத்தில் வெளியிட்டது. ‘மாமனிதன்’ படம் ஓடிடியில் சக்கை போடு போட்டது. தொடர் வரவேற்பால் குஷியான ‘ஆஹா’ ஓடிடி குழு  படத்தின் ஓடிடி வெற்றியை விழா எடுத்துக் கொண்டாடியது.

தொடர்ந்து பல நாடுகளில் நடத்தப்பட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்ட  ‘மாமனிதன்’ பல  பல விருதுகளை தொடர்ச்சியாக வென்று வருகிறது.

தற்போது சிங்கப்பூரில் நடைபெற்ற வேர்ல்டு பிலிம் கார்னிவல்’ எனப்படும் சர்வதேச திரைப்பட விழாவிலும் மாமனிதன் படம் கலந்து கொண்டது.

இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது, சிறந்த குடும்ப படத்திற்கான விருது, சிறந்த திரைக்கதையிற்கான விருது, சிறந்த நடிகருக்கான விருது, என்று 4 விருதுகளை இத்திரைப்படம் பெற்று சாதனை படைத்துள்ளது.