காமராஜர் மக்கள் கட்சி தென்சென்னை மாவட்டம் சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதான விழா நடைபெற்றது.

காமராஜர் மக்கள் கட்சி தென்சென்னை மாவட்டம் சார்பில்

அக்டோபர் 2 இன்று காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும், காமராஜர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்தில் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.

மிகச்சிறப்பான இந்த விழாவில் காமராஜர் மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு. குமரய்யா, மாநில இளைஞரணி தலைவர் திரு. ஜீவா, மாநில செயலாளர் திரு. சுப்ரமண்ய பாரதி, மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. மீனா ராஜசேகரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. சுரேஷ், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதித் தலைவர் திரு. விருகை ராஜா, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதித் தலைவர் திரு. மணிவண்ணன், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதித் தலைவர் திரு. சார்லஸ், மாநில தகவல் தொழில் நுட்ப அணியின் செயலாளர் திரு. மூர்த்தி, மாநில தகவல் தொழில் நுட்ப அணியின் இணை செயலாளர் திரு. வினோத் பாரதி, விருகம்பாக்கம் இளைஞரணி செயலாளர் திரு. வர்ஷன், நிர்வாகிகள் திரு. ரங்கராஜன், மற்றும் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.