கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சத்யா மொபைல் ஸோரூம் மற்றும் தமிழ்நாடு நவ் இணைந்து குறும்படப் போட்டி நடத்தினர்…
குறும்படத்தின் நீளம் மூன்று நிமிடம் மட்டுமே இருக்க வேண்டும்..முழுக்க முழுக்க மொபைல் போனிலே ஷூட்டிங், எடிட்டிங்,டப்பிங் போன்ற அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்பது நிபந்தனை…இதில் நாங்கள் உருவாக்கிய மன்னார் & கம்பெனி என்கிற காமெடி குறும்படம் முதல் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பட்டினப்பாக்கம் லீலா பேலஸில் நடந்த வெற்றியாளர்கள் பரிசளிப்பு விழாவில் ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத் தொகையாக அளித்தனர்…இந்த வெற்றிக்கு காரணமான முகநூல் நேயர்கள்,ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள்,உறவினர்கள்,ரசிகர்கள் மற்றும் எங்களை தேர்ந்தெடுத்து கெளரவப் படுத்திய சத்யா மொபைல்ஸ் மற்றும் தமிழ்நாடு நவ் ஆகிய அனைவருக்கும் எங்களது மகிழ்ச்சியையும்,நெ,ஞ்சம் நெகிழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்…
நடிகர்கள் : சுப்ரமணியபாரதி வெடிக் கண்ணன்
தயாரிப்பு : வெடி கண்ணன கதை,இயக்கம் : தங்கமித்ரன்,பின்னணி இசைக்கோர்ப்பு,படத்தொகுப்பு,ஒளிப்பதிவு : சு.சத்தியசீலன்…