*பெண் குழந்தைக்கு தந்தையான மகிழ்ச்சியில் யோகி பாபு*

*பெண் குழந்தைக்கு தந்தையான மகிழ்ச்சியில் யோகி பாபு*

தமிழக அரசால் 2021ம் ஆண்டு ‘ கலைமாமணி’ பட்டமளித்து கௌரவிக்கபட்ட யோகி பாபுவிற்கு, அக்டோபர் 23ம் காலை அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

நகைச்சுவை நடிகராக மற்றும் இல்லாமல், சிறிது காலத்துக்கு பின்னர் கதாநாயகனாகவும் களம் இறங்கியுள்ளார்.

தற்பொழுது எழுத்தாளராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டு பன்முக கலைஞராக வெள்ளித்திரையில் உலா வருகிறார் நடிகர் யோகி பாபு.

இவருக்கு கடந்த 2020 ஆண்டு, மஞ்சு பார்கவியுடன் திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் முடிந்தது. ஏற்கனவே, இவர்களுக்கு ஏற்கனவே விஷாகன் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், தற்பொழுது இரண்டாவதாக ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது அவர், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தியாக அமைந்துள்ளது.