“பரோல்” திரைப்படம நவம்பர் 11 உலகமெங்கும் திரை ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

“பரோல்” திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு !!!

TRIPR ENTERTAINMENT சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில், இளம் திறமையாளர்களின் நடிப்பில், குடும்ப உறவுகளின் பின்னனியில் ஒரு புதுமையான கேங்ஸ்டர் ஆக்சன் படமாக உருவாகியுள்ள படம் “பரோல்”. இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் பெரும் வரவேற்பை குவித்த நிலையில் இப்படம் வரும் நவம்பர் 11 உலகமெங்கும் திரை ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

படவெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்

நடிகர் R S கார்த்திக் பேசியதாவது…
இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படத்தின் வெற்றி இது போன்று உள்ள படங்கள் கொண்ட கதை வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள்.

திரு. நாஞ்சில் சம்பத் பேசியதாவது…
“மிகவும் நுணுக்கமான கதையை அடையாளம் கண்டு, அதில் திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர். இந்த கதையில் அம்மாவிற்கும் மகனுக்குமான பாசத்தை அழகான திரைக்கதையாக வடிவமைத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனைகள் கொண்ட ஆட்கள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள். அந்த வகையில் இந்த படமும், இந்த படக்குழுவும் கண்டிப்பாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

இயக்குனர் துவாரக் ராஜா பேசியதாவது…
“இந்த படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. அவர் என்னை முழுமையாக நம்பினார். இந்த படம் ஒரு குடும்பத்தை பற்றிய கதை. குடும்பங்களில் நாம் பார்க்காத ஒரு பக்கத்தை பற்றிய கதை இது. அனைத்து நடிகர்களும் முழு அர்பணிப்புடன் நடித்து கொடுத்தனர். இந்த படத்தின் கதைக்களத்தில் ஆண்களால் ஏற்படும் பிரச்சனையை, பெண்கள் தீர்ப்பதாய் இருக்கும். இந்த படத்தில் நடித்த பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அந்த உணர்வுகளை சிறப்பாக கடத்தியுள்ளனர். இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. நன்றி.

நடிகர் லிங்கா பேசியதாவது…
” தயாரிப்பாளர் மது அவர்களுக்கு சினிமா மீது அதிகமான காதலும், அர்பணிப்பும் இருக்கிறது. இந்த படத்தின் திரைக்கதை ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும். நாங்கள் இதை வித்தியாசமான பாணியில் இருக்குமாறு தான் உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகை கல்பிக்கா பேசியதாவது..
“என்னை இந்த படத்தில் நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி. நாங்கள் அனைவரும் ஒன்றாக படத்தை பார்த்தோம். படத்தை பார்த்த பிறகு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். படக்குழுவில் உள்ள அனைவரும் என்னை வீட்டில் இருப்பதை போல் பார்த்து கொண்டனர். படம் பார்த்து உங்கள் கருத்துகளை கூறுங்கள். நன்றி.

இசையமைப்பாளர் ராஜ்குமார் அமல் பேசியதாவது..
“என்னைப் போன்ற ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது ஒரு கனவு படம். இந்த படத்தில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். எனது திறமையை வெளிகாட்ட எனக்கு இதில் நிறைய ஸ்கோப் இருந்தது. நவம்பர் 11க்கு பிறகு இந்த படம் அனைவருக்கும் சொந்தமானது. அனைவரும் தியேட்டரில் படத்தை பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் மேக் மணி பேசியதாவது..
“நானும் இயக்குனர் துவாரக் ராஜாவும் குறும்படங்களில் இருந்தே நண்பர்கள். பரோல் திரைப்படம் எங்கள் குழுவின் கூட்டு முயற்சி. பார்வையாளர்கள் எங்கள் முயற்சிகளை அங்கீகரித்து பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை அனைவரும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகர்கள்

R S கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் ஆகியோருடன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு

இயக்குனர் – துவாரக் ராஜா
தயாரிப்பாளர் – மதுசூதனன்
இசையமைப்பாளர் – ராஜ்குமார் அமல்
ஒளிப்பதிவாளர் – மகேஷ் திருநாவுக்கரசு
எடிட்டர் – முனிஸ்
கலை இயக்குனர் – அருண்குமார்.A
செயல் – ஓம் பிரகாஷ் S.D
ஆடை வடிவமைப்பாளர் – அகிலன் ராம்
டிஐ – ப்ரிஸம் & பிக்சல்கள் Prism & Pixels
மக்கள் தொடர்பு – சதீஷ் Team AIM
கிரியேட்டிவ் ப்ரோமோஷன்கள் – CTC MediaBoy
இன்ஹவுஸ் பப்ளிசிட்டி – லக்ஸ் என்டர்டைன்மெண்ட்
இசை பார்ட்னர் – ட்ரெண்ட் மியூசிக்
விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஜெகன்
டப்பிங் – ஜி ஸ்டுடியோஸ்
ஒலி வடிவமைப்பு – ராஜ்சேகர்.K (ரெசனன்ஸ் ஸ்டுடியோ)
மிக்சிங் – RT ஸ்டுடியோஸ்

படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் நவம்பர் 11 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.