“பரோல்” திரைப்பட விமர்சனம்

பரோல் விமர்சனம்

அம்மா மகனின் பாச போராட்டம் வென்றதா? பரோல் விமர்சனம்

அம்மா மகனின் பாச போராட்டமாக வெளியாகி உள்ள பரோல் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் லிங்கா, ஆர் எஸ் கார்த்தி, ஜானகி சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் துவாரக் ராஜா இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் பரோல்.

படத்தின் கதைக்களம் :

ஆராயி என்ற தாய் தன்னுடைய இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறாள். முதல் மகன் கரிகாலன் மீது ஆராயி உயிரையே வைத்துள்ளார். இதனால் இரண்டாவது மகன் கோவலனுக்கு தன்னுடைய அண்ணன் மீது கோபமும் பொறாமையும் உண்டாகிறது. இப்படியான நிலையில் தன்னுடைய அம்மாவை தவறாக பார்த்தவரை கல்லால் அடித்து கொலை செய்து விடுகிறார் கரிகாலன். இதனால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட அங்கு இவரை சிலர் தவறாக பயன்படுத்த அவர்களையும் கொலை செய்து விடுகிறார். வெளியில் இருக்கும் ஆராயி தன்னுடைய மகனை வெளியே கொண்டு வர போராட கோவலன் தன்னுடைய அண்ணன் வெளியே வரக்கூடாது என திட்டம் போடுகிறான். இப்படியான நிலையில் ஆராயி திடீரென உயிரிழக்க அதன் பிறகு என்னவானது? கரிகாலன் எப்படி பரோலில் வருகிறார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

லிங்கா மற்றும் ஆர்எஸ் கார்த்திக் என இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்துக்கு பெரிய பலம் சேர்த்து உள்ளனர். ஜானகி சுரேஷ் அம்மாவாக அனைவரையும் உருக வைத்துள்ளார்.

இயக்குனர் துவாரக் ராஜா வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுத்து நம்மை கவர்ந்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

மொத்தத்தில் பரோல் கோபத்தின் விளைவை விளக்கும்.

Rating: 3.5/5