சென்னை *தூய்மை பணியாளர்களுக்கு* அரிசி/மளிகை வழங்கிய *கற்பக விருட்சம்*
கற்பக விருட்சம் அறக்கட்டளை சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கனமழையை பொருட்படுத்தாமல், சாலைகளில் மழை நீர் தேங்காமல் வடியும் பணியில் ஈடுபட்டு வரும் *10* தூய்மை பணியாளர்களுக்கு *அரிசி/மளிகை* பொருட்களை 13/11/2022 அன்று வழங்கியது.
நிகழ்ச்சியில் சின்னத் திரை நடிகர் *திரு.விஜய் ஆனந்த்* கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அறக்கட்டளையின் பணிகளையும், தூய்மை பணியாளர்களின் சேவையையும் பாராட்டினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட இயக்குநர் *திரு.சத்தியசீலன்* செய்து இருந்தார்.