மாவட்ட பாஜக செயலாளர் திரு.நரேந்திரன் DS க்கு பிறந்தநாள் விழா.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக செயலாளர்
திரு.நரேந்திரன் DS க்கு பிறந்தநாள் விழா.

 

பாஜக மாநிலச் செயலாளர்கள், மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் நேரில் வாழ்த்து.

மத்திய சென்னை மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் திரு.நரேந்திரன் DS தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு தமிழக பாஜக மாநில செயலாளர், மாநில துணைத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜகவின் துடிப்பு மிக்க தொண்டராகவும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான திரு.நரேந்திரனின் பிறந்தநாள் விழா நேற்று அண்ணா நகர் டவர் கிளப்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது,
இந்த விழாவில் தமிழக பாஜக துணைத் தலைவர்கள் ஆன திரு.சக்கரவர்த்தி மற்றும் மாநிலச் செயலாளர் திருமதி.சுமதி வெங்கடேசன் ஆகியோர் நேரில் வந்து நரேந்திரனுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்,
அதே போன்று மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு. தனசேகரன் அவர்கள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து நரேந்திரனை வாழ்த்தினார்.

மேலும் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் உள்ள பாஜக கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரில் வந்து நரேந்திரனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

மேலும் நண்பர்கள் உறவினர்கள் என பலர் ஆள் உயர மாலைகளை அணிவித்து நரேந்திரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர், பிறந்தநாள் கொண்டாடிய நரேந்திரன் இந்த நன்னாளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெற தமிழக பாஜக தலைவருக்கு துணை நிற்பதாகவும், அந்த வெற்றியை இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு சமர்ப்பிக்க உறுதி ஏற்பதாகவும் அவர் தெரிவித்தார்.