“கொலை” திரைப்பட விமர்சனம்.

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த் சங்கர்
இசை : கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்
இயக்கம் : பாலாஜி குமார்
தயாரிப்பு : இன்பினிட்டி ஃபிலிம் வெஞ்சர்ஸ் – லோட்டஸ் பிக்சர்ஸ்

அடுக்குமாடி குடியிருப்பில். புகழ் பெற்ற முன்னணி மாடலிங் அழகியான மீனாட்சி செளத்ரி மர்மமான முறையில் பூட்டியிருந்த தன் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ரித்திகா சிங்கிற்கு ஒப்படைக்கிறார்

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை வருவதால் முதலில் இக் கொலை வழக்கை விசாரிக்க மறுக்கும் விஜய் ஆண்டனி பின் ரித்திகாசிங்கின் வற்புறுத்தலுக்கு  இணங்க வழக்கை விசாரிக்க உடன் படுகிறார் இருவரும் சேர்ந்து மேற்கொள்ளும் கொலை வழக்கு பயணிக்கும் விதமும், கொலையாளி யார்?, எதற்காக கொலை செய்தார்? போன்ற கேள்விகளுக்கான விடையும் தான் ‘கொலை’ படத்தின் மீதிக்கதை

இதே பாணியில் பல படங்கள் வந்துள்ளன. ஆனால், இந்த படம் சில விதங்களில் வித்தியாசப்படுகிறது.

படத்தின் இயக்குனர் பாலாஜி குமார் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்தவர் என்பதால் தனது முந்தைய படத்தை போலவே இப்படத்தையும் மிகவும் வித்தியாசமான முறையில் ரசிக்கும் படி இயக்கியுள்ளார். தமிழில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை கொடுக்க விரும்பிய இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஒரு கொலை, எதற்கு செய்தார்கள், யார் செய்தார் என படிப்படியாக விரியும் திரைக்கதையில் தன்னால் முடிந்த அளவு புதுமைகளை புகுத்தியுள்ளார். விஜய் ஆண்டனி வயதான தோற்றத்தில் புதிதாக நடிக்க முயன்றுள்ளார். விசாரணை காட்சிகளில்   விசாரிக்கும் விதம் நம்மை  பார்க்க ரசிக்கும் படியாகவும் இருந்தது  பாராட்டுகள் …

ரித்திகா சிங் நிதானமான நடிப்பை அலட்டல் இல்லாமல் கொடுத்துள்ளார். மேலதிகாரியாக ஜான் விஜய் தனது பணியை நன்றாக செய்துள்ளார். மீனாட்சி சௌத்ரி மாடல் அழகி என்பதற்கு பொருத்தமாக இருக்கிறார்.பார்வையாளர் களிடம் பேசும் பாணி.. இது வித்தியாசமாக இருப்பதோடு  ரசிக்கவும் வைக்கிறது.

மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர்.கொலை வழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு,  கதைக்களமான மாடலிங் துறை பற்றி விரிவாக சொல்லியிருப்பதை ரசிக்க முடிகிறது

சஸ்பென்ஸ் திரில்லர் என்றவுடன் பின்னணி  இப் படத்திற்க்கு இசை மிகபெரிய பலம் கேமரா  இயல்பான கதை யோட்டத்துடன் பயணிக்கிறது கேமராவும், இசையும் சேர்ந்தது சிறப்பு ..

சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் கோணங்களும், ஒளி அமைப்பும் ஒரு ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.  க்ரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்களும்….பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் எல்லோரும் மனதை கவர்ந்து இருக்கிறது.  இயக்குனருக்கு பக்கபலமாக இருந்த இப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் பேசப்படும்

இப்படத்தின் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் கொலை படம் பார்க்க படியாகவும் ரசிக்கும் படியாக இருந்தது …