இயக்குனர் நவின் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ஆஷிஸ் வித்யார்த்தி, வித்யா பிரதீப் மற்றும் பூஜா ஜாவேரி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “எக்கோ”.
ஸ்ரீகாந்த் – பூஜா இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். தனது மாமனாரின் நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஸ்ரீகாந்த்.
இரவு நேரத்தில், ஸ்ரீகாந்தின் கனவில் மட்டுமல்லாமல் நினைவிலும் ஏதோ ஒரு அமானுஷ்யம் தொந்தரவு செய்கிறது..
தூக்கம் தொலைத்து நிம்மதி தொலைத்து தவித்த ஸ்ரீகாந்த், அமானுஷ்யத்தை துரத்தும் நபராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தியை நாடுகிறார்..
சில திடுக்கிடும் தகவல்களை அவரிடம் கூறுகிறார் பிளாஷ்பேக் கதை சொல்கிறார்
அதன்பிறகு என்ன நடந்தது…? அந்த அமானுஷ்யம் யார்.?? அது அமானுஷ்யம் தானா.??? ஸ்ரீகாந்திற்கு என்ன நடந்தது.?? என்பதே படத்தின் மீதிக் கதை…
கொடுத்த கேரக்டரை நன்றாகவே செய்து முடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.
குடும்ப பெண்ணாக ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து காட்சிகளுக்கு அழகு சேர்த்திருந்தார் சரியான ஜோடி…பொருத்தம்
பாடல் மற்றும் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார் பூஜா…
பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்க்கு பக்கபலமாக தான் இருந்தது….