“பரம்பொருள்” திரைப்பட விமர்சனம்.

கவி கிரியேஷன்ஸ் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரிப்பில் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிட சி.அரவிந்த் ராஜ் இயக்கி இருக்கும் படம் ‘பரம்பொருள்’

இதில் ஆர்.சரத்குமார், அமிதாஷ், காஷ்மீர் பர்தேஷி ,சார்லஸ் வினோத் ரவி வெங்கட், டி.சிவா, பாலாஜி சக்திவேல். ஸ்வாதிகா, பாவா செல்லதுரை, கஜராஜ், வி.பாலகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், செந்தில் குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பகலைஞர்கள் : இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு இயக்குனர் – எஸ்.பாண்டிகுமார், எடிட்டர் – நாகூரன் ராமச்சந்திரன், சண்டைக்காட்சி – தினேஷ் சுப்பராயன், நடனம் – சதீஷ் கிருஷ்ணன், ஆடைகள் – பூர்ணிமா ராமசாமி, கலை – குமார் கங்கப்பன், பாடல் வரிகள் – மதன் கார்க்கி, சினேகன், விவேக், நிர்வாக தயாரிப்பாளர் – ஜாயல் பென்னட், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் (மைத்ரேயன் ) சரத்குமார் மனைவி மகளைவிட்டு பிரிந்து பெரிய கனவுலகத்துடன் வாழ்ந்து வருகின்றனர் ஒய்வு பெறுவதற்குள் ஊட்டியில் நிலம் வாங்கி வசதியாக செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசையோடு மனைவி, மகள் பற்றி கவலையில்லாமல் பணம் ஒன்றையே குறிக்கோளாக பேராசை பிடித்த மனிதராக வாழ்கிறார். அதே சமயம் உயிருக்கு போராடும் தன் தங்கையின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் வேலை இழந்து தவிக்கும் ஆதி (அமிதாஷ்) திருட்டு தொழில் செய்து பணத்தை சேர்க்க  முயற்ச்சிக்கிறார் இதனிடையே இன்ஸ்பெக்டர் மைத்ரேயனின் வீட்டில் கொள்ளையடித்து ஆதி மாட்டிக் கொள்கிறார். ஆதி சிலை கடத்தும் கும்பலிடம் வேலை செய்ததை அறிந்து மைத்ரேயன் அவரை பழங்கால சிலைகளை திருடி விற்க உதவி செய்தால் ஆதியை போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வைப்பதாக சொல்லி மிரட்டுகிறார். ஆதியும் தன் தங்கையின் மருத்துவச் செலவை கருத்தில் கொண்டு சிலைகடத்தலுக்கு சம்மதம் சொல்கிறார். ஆயிரம் ஆண்டு தொன்மை நிறைந்த புத்தர் சிலை கடத்தல் கும்பலிடமிருந்து மைத்ரேயனிடம் சிக்குகிறது. அந்தச் சிலையை விற்க மைத்ரேயன் மற்றும் ஆதி பலவழிகளில் முயற்சி செய்கின்றனர். ஆனால் சுலபமாக விற்று விடலாம் என்று தப்பாக கணக்கு போடும் இருவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இருவரும் அந்த சிலையை மறைமுகமாக விற்றார்களா? பணம் கைக்கு கிடைத்ததா? சிலையால் அவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன? இறுதியில் தங்கையின் மருத்துவ சிகிச்சைக்கு ஆதியால் உதவ முடிந்ததா? இதற்கு பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.

சிலை கடத்தலை மையமாக வைத்து பல தமிழ் படங்கள் வந்துவிட்டன. ஆனால் அந்த கதையை படமாக்கிய விதம் மூலம் பரம்பொருள் தனித்து தெரிகிறது. வழக்கமான கேங் சண்டை, கொலைகளை விட்டுவிட்டு சிலை கடத்தல் வியாபாரத்தின் நுணுக்கங்களையும், பிரச்சனைகளையும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

கிளைமாக்ஸ் சீக்வென்ஸில் யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த டுவிஸ்ட்டும் படத்திற்கு (பிளஸ்) பலமாக அமைந்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத ஒன்று கதை திடீர் என்று பழிவாங்கும் படலமாக மாறுகிறது.

சரத்குமார் கெட்ட போலீஸ் மிரட்டல் அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். மைத்ரேயன் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல்லாக காட்டியிருக்கலாம். சரத்குமாரும் சரி, அமிதாஷ் பிரதானும் சரி அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அமிதாஷின் காதலியாக வந்திருக்கும் காஷ்மிரா கச்சிதமாக தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னனி இசை  படத்திற்கு மிகவும் பலமாகவும் பொருத்தமாக இருக்கிறது.
இதில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்

சட்டவிரோத  வியாபார உலகை விரிவாக காட்டியிருக்கிறது பரம்பொருள். வித்தியாசமான கதைகள அனுபவமாக இருக்கிறது.   படம் வேற லெவலில் ….