ICICI ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகியவை வங்கிக்காப்பீடு கூட்டாண்மையை உருவாக்குகின்றன

ICICI ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகியவை வங்கிக்காப்பீடு கூட்டாண்மையை உருவாக்குகின்றன

உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 700 க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான நீண்ட கால சேமிப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை வழங்க உள்ளது.

இந்த வங்கியின் பெரிய மற்றும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்ய இந்த கூட்டாண்மை ICICI ப்ருடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் க்கு உதவும்.
சென்னை: ICICI புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஒரு முன்னணி சிறு நிதி வங்கியான உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (உஜ்ஜீவன் SFB), ஆகியவை ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை விநியோகிப்பதற்காக ஒரு வங்கிக்காப்பீடு கூட்டாண்மையில் நுழைந்துள்ளன.
இந்த கூட்டாண்மையின் கீழ், உஜ்ஜிவன் SFB, 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 700 க்கும் அதிகமான கிளைகளின் விரிவான நெட்வொர்க் மூலம் ICICI ப்ருடென்ஷியல் லைஃப் இன் வாடிக்கையாளர் நட்பு பாதுகாப்பு, நீண்ட கால சேமிப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்களின் முழு தொகுப்பையும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ஆயுள் காப்பீடு ஆனது, எந்தவொரு நிதித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது, எனவே ICICI ப்ருடென்ஷியல் லைஃப், வாடிக்கையாளர்களின் பல்வேறு வாழ்க்கை நிலைத் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களின் ஒரு தொகுப்பை உருவாக்கியுள்ளது.
முதன்மை வருமானம் ஈட்டுபவருக்கு இழப்பு ஏற்பட்டால், இந்த பாதுகாப்பு திட்டங்கள் வருமானத்திற்கு, மாற்றாக செயல்படும். நீண்ட கால சேமிப்புத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சேமிப்பு தொகுப்பை உருவாக்குவதில் அல்லது ஒரு கூடுதல் வருமான ஆதாரத்தை உருவாக்கி நிதி இலக்குகளை அடைவதற்கு உதவும். ஓய்வூதிய திட்டமிடுதலுக்கான திட்டங்கள் , வாடிக்கையாளர்கள் நிதி ரீதியாக சுதந்திரமான ஓய்வு பெற்ற வாழ்க்கையை நடத்துவதற்கு உத்தரவாதமான வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறுவதை உறுதி செய்யும்.
இந்த அங்கீகாரமான பாதுகாப்பு தளத்தில், ICICI Pru iProtect Smart மற்றும் ICICI Pru iProtect Return of Premium ஆகியவை கிடைக்கும், அதேசமயம் நீண்ட காலத்திற்கு ஒரு சேமிப்புத் தொகுப்பை உருவாக்க உதவும் ஒரு சில அறியப்பட்ட திட்டங்களான ICICI ப்ரூ கிஃப்ட் ப்ரோ, ICICI ப்ரூ கோல்ட் மற்றும் ICICI ப்ரூ சிக்நேச்சர் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் வசதியாக வாங்க முடியும். தவிர, ICICI ப்ரூ கேரண்ட்டீட் பென்ஷன் பிளான் பிலெக்ஸி ஆனது, உஜ்ஜிவன் SFB வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் ஓய்வூக்காலத்திற்கு முறையாகத் திட்டமிட உதவும்.
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. இட்டிரா டேவிஸ், “இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ICICI புருடென்ஷியல் லைஃப் உடனான எங்கள் கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விருப்பமுள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு அவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாக்க உதவுகின்ற காப்பீட்டுத் தீர்வுகளுக்கான அணுகலை அதிகரிப்பதே எங்கள் நோக்கமாக இருக்கிறது. எங்கள் பரந்த நெட்வொர்க், ICICI புருடென்ஷியல் லைஃப் இன் அனைத்தையும் உள்ளடக்கிய தீர்வுகளுடன் இணைந்து, காப்பீட்டு சேவைகளுக்கான தேவை இடைவெளியை மூடுவதற்கு உதவுகிறது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு தீர்வுகளை வழங்குவதில் எங்கள் நிலையை மேலும் வலுப்படுத்தும்.” என்று கூறினார்.
ICICI ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அனுப்பக்சி கூறுகையில், “உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உடன் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த கூட்டாண்மை வங்கியின் வாடிக்கையாளர்களின் ஆயுள் காப்பீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய எங்களுக்கு உதவும். எங்களின் வாடிக்கையாளர்-நட்பு திட்டங்களின் தொகுப்பு உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இன் வழங்கல்களை நிறைவு செய்கிறது மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய உதவும். குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் ஆயுள் காப்பீடு சமூகத்தில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. சரியான வாடிக்கையாளருக்கு சரியான விலையில் சரியான திட்டம் என்ற எங்கள் இலக்கை அடைய, டிஜிட்டல் திறன்களின் ஒரு தொகுப்பான ICICI ப்ரூ ஸ்டேக் ஐ நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது வாடிக்கையாளர் பிரிவாக்கம், தொடர்பு உருவாக்கம், வாடிக்கையாளர் தேவைகளைப் பற்றிய சிறந்த புரிதல், பொருத்தமான திட்ட முன்மொழிவுகள் ஆகியவற்றுடன் எங்கள் விநியோகக் கூட்டாளர்களை செயல்படுத்துகிறது மற்றும் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க வழிவகுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான அனைத்தையும் உள்ளடக்கிய டிஜிட்டல் செய்யலாக்கப் பயணத்தை வழங்குகிறது.
ICICI ப்ரூ ஸ்டேக் துல்லியமான வாடிக்கையாளர் பிரிவாக்கத்தை செயல்படுத்துகிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு டெர்ம் பை இன்வைட் (காலமுறை காப்பீட்டு திட்டங்கள்) மற்றும் இன்சூரன்ஸ் பை இன்வைட் (நீண்ட கால சேமிப்பு திட்டங்கள்) வழங்கல்களை விரிவுபடுத்துவதை சாத்தியமாக்குவாதற்கு எங்களுக்கு உதவுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஸ்டேக், வாடிக்கையாளர்களுக்கு காகிதமில்லா வாங்கும் அனுபவத்தை வழங்குகிறது, மேலும் சேமிப்பு சார்ந்த வணிகங்களுக்கு நாங்கள் இப்பொழுது காப்பீடுகளை அதே நாளில் வழங்கமுடியும். உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் போன்ற சிறு நிதி வங்கிகள், நாட்டில் ஆயுள் காப்பீட்டின் ஊடுருவலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்துவதன் மூலம் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்க முடியும்.”என்று கூறினார்.
மேலும் கேள்விகளுக்கு corpcomm@iciciprulife.com&ram.uppara@ujjivan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்