ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்பட விமர்சனம்.

ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், சாருகேஷ், சேனாதிபதி தர்மா, கோபி, சுதாகர், ஹரிஜா, ஆஷிக் உசேன், நந்தகோபால கிருஷ்ணன், அப்துல் லீ, ஜாங்கிரி மதுமிதா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த், கிரேன் மனோகர் ,ரித்விகா, சந்தோஷ் பிரியன், ஷா, விஜய் குமார் ராஜேந்திரன், சத்தியமூர்த்தி என நடிகர் பாட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கௌஷிக் இசையமைத்துள்ளார்.

கதைகளம் :ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் பற்றி சொல்லும்  படம்.
திரைப்படம் இயக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நாயகன் சத்யமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் கோபி, சுதாகர், விஜய் ஆகியோர் திரைப்படம் பார்ப்பதற்காக ஊரின் ஒதுக்கு புறமாக உள்ள பழைய தியேட்டருக்குச் செல்கிறார்கள். தியேட்டரில் பலான கவர்ச்சி பட போஸ்டர் ஒட்டபட்டு உள்ளது அதே தியேட்டரில் யாஷிக ஆனந்தும், அவரது தோழி ஹரிஜாவும் வருகிறார்கள். அவர்களைப் போல் மேலும் சிலர் அந்த தியேட்டரில் படம் பார்க்க வர, திரையில் அவர்கள் பார்க்க வந்த படம் திரையில் ஒடவில்லை வேறஒரு பேய் பேடம் திரையிடப்படுகிறது. அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த  திரையில்  ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தை ஆவிகள் நடமாடுவதாக அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வருகிறது இதனால், தியேட்டர் இருப்பவர்கள் அலறி அடித்து அங்கும் இங்குமாக தப்பித்து ஓட  தப்பி செல்ல வெளியேற ஓடி கேட் ஏரி வெளியே குதித்தால் மறுபடியும் தியேட்டர் உள்ளே இருக்கிறார்கள்   அவர்களால் வெளியேற முடியவில்லை. எத்தனை முறை முயற்சித்தாலும், அவர்கள் திரும்ப…திரும்ப…அந்த தியேட்டர் சுற்றி.. சுற்றி வருகின்றனர் .நேரம் அதிகமாக இவர்களுக்கு பயம் கூடுகிறது , இறுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, அந்த தியேட்டரில் நடக்கும் அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் பயமுறுத்தும் மர்மம்  சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் மீதிக்கதை.
இதில் நடித்தவர்கள்:
குடிகாரராக கிரேன் மனோகர் தன் மனைவியின் தொல்லைக்கு பயந்து இரவெல்லாம் தியேட்டரில் குவார்ட்டர் (மதுபான) பாட்டிலுடன் குடித்து கொண்டே இருப்பார் அதிகம் பேச மாட்டார் அப்ப… அப்ப கொஞ்சம்  ஒரு சில வார்த்தைகள் பேசுவார் இவர்களுடன் நடித்த அனைத்து நடிகர் பட்டாளம் சிறப்பாக நடித்துள்ளனர்  முனிஷ்காந்த் இப்படத்தில் வில்லத்தனம் காமெடி இதுவரை நடிக்காத கதாபாத்திரம் சரியாக செய்துள்ளார் இவருடன் மனைவியாக மதுமிதா எப்பவும் போல தன்னுடை நடிப்பின் பங்களிப்பை சிறப்பாகவும் சரியாகவும் கொடுத்துள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
ஜோஸ்வா ஜே பெரிஸின் ஒளிப்பதிவும், கெளசிக் கிரிஷின் இசையும் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளனர்
பழைய தியேட்டரை  ஒன்றைப் பிடித்து கிட்டத்தட்ட முழு படத்தையும் அங்கேயே படமாக்கி கொஞ்சம் பயமுறுத்தியும் சிரிக்க வைத்தும்  செய்துள்ளார்  இயக்குநர் ரமேஷ் வெங்கட். முயற்ச்சிக்கு பாராட்டு:
நிறைய அமனுஷ்யம் படங்கள் வந்தாளும் இந்த படம் வித்தியாசமான   காமெடி கதைகளமாக அமைந்துள்ளது
மொத்ததில் இப்படம் ரசிக்கும்படியாகவும் இருந்தது .
இப்பட குமுவினரின் முயற்ச்சிக்கு பாராட்டு !

படம் பார்க்க வந்தால் …ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது