‘ரூட் நம்பர் 17’ திரைப்பட விமர்சனம்

அபிலாஷ் தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள ரூட் நம்பர் 17 படம்  இந்த வாரம்டிசம்பர் 29ஆம் தேதி   திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, ஹரிஷ் பேரடி, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒசேப்பச்சான் இசையமைக்க பிரசாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதல் ஜோடிகளான அஞ்சனா மற்றும் கார்த்திக் இருவரும் தனிமையில் சந்தோசமாக இருப்பதற்காக சத்யமங்களம் காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். இவர்களுக்கு தொந்தரவு இருக்ககூடாது என்று இருவரும் தன் செல்போனை  வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அஞ்சனா கிளம்பும்முன் தனது தோழிக்கு மட்டும் நான் Boy friend உடன்        செல்கிறேன் செல்லிட்டு வருகிறார் . காதலன் வரும் வழியில் மருந்துகடையில் (medical Shop) காண்டம் வாங்கிகொள்கிறாள் காதல் ஜோடி இருவரும்  நடுகாட்டுக்குள் வந்துவிட்டனர்  தனிமையில்   சந்தோசமாக இருக்கின்றனர் திடீர் ஒரு உருவம் அங்கும் இங்கும் ஒடுகிறது திடீர் மர்மமான நபர் காதல் ஜோடியை கடத்தி கொண்டுபோய் அவனது பாதாள அறைகுகையில்  அடைத்து வைக்கிறான் (சைக்கோ) ஜித்தன் ரமேஷ் அவனிடமிருந்து காதலர்கள் தப்பிக்க முயற்சிக்கும்போது,  சைக்கோ இவர்களை பிடித்து அடித்து உதைக்கிறான் காதலன் தலையில் பலத்த காயம் இறந்து விடுகிறான் பிறகு இரண்டு நாட்கள் ஆகிறது. அப்போது அஞ்சனாவின் தோழி இரண்டு நாட்கள் ஆனதால் போலீசிடம் புகார் கொடுக்கிறார், பிறகு போலீஸ் அவர்களை தேடி செல்கிறது அவரையும் பிடித்து பாதாள அரையில் அடைத்து  வைக்கிறான் கடைசியில் அஞ்சனா, கார்த்திக் போலீஸ் நிலைமை என்ன? காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? சைக்கோ ..யார்? என்பதே படத்தின் மீதி கதை…
நாயகனாக சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருக்கும் ஜித்தேன் ரமேஷ், காட்டுப் பகுதியில் வாழ்ந்தாலும்,  அதிகம் பேசாமல் நடிப்பிலேயே பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சித்திருப்பவர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருப்பவர், பிளாஷ்பேக்கில் சொல்லும் கதையில் நடிக்கும் காட்சி Look லுக்கில் நடித்து அனைவரின் கவனத்தைபெறுகிறார்.
காதல் ஜோடியாக நடித்திருக்கும் கார்த்திக் மற்றும் அஞ்சு, வில்லனாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் அருவி மதன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இதில் பணியாற்றிய ஒளிப்பதிவு: பிரஷாந்த் பிரணவம் ஒளிவீச்சு காட்டுபகுதியை அழகா நம் கண்முன் கொண்டுவந்து கொடுத்துள்ளார்.பின்னனி, இசையமைப்பாளர் அவுசிப்பச்சனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. எடிட்டர் : தேவையான காட்சிகள் மட்டும் சேரத்தல் தன் பங்களிப்பு சிறப்பாக கொடுத்துள்ளர் ‘ரூட் நம்பர் 17’  வழிதடம் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் இயக்குனர் முயற்ச்சிக்கு பாராட்டு இருந்தாலும் திரில்லர் படம் அனைத்து ரசிகர்களுக்கு ஏற்ற படம் ‘