பத்மஸ்ரீ “நல்லி குப்புசாமி குப்புசாமி” மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ராதிகா வைரவேல்லவன் கலந்து கொண்ட ஜகதாலயா நடத்தும் மார்கழி பெஸ்டிவல்

பத்மஸ்ரீ “நல்லி குப்புசாமி குப்புசாமி” மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ராதிகா வைரவேல்லவன் கலந்து கொண்ட ஜகதாலயா நடத்தும் மார்கழி பெஸ்டிவல் மார்கழி நிருத்யோத்சவ் 2024, இளம் மற்றும் வரவிருக்கும் பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் திறமைகள் முன்னிலைப்படுத்தும் இந்த நிகழ்ச்சியாறது ஜனவரி 10 ஆம் தேதி ஸ்ரீ பாலகணபதி ஹால், சாந்தோம் என்ற இடத்தில் நடைபெற்றது.

ஜகதோ உத்சவில் வெற்றி பெற்ற கலைஞர்கள் திருமதி கீர்த்தனா, திருமதி ஸ்ரீநிதி, கிரி தர்ஷினி ஆகியோருக்கு மார்கழி நிருத்யோத்சவ் 2024 இல் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது மேலும் ‘யுவ கலாவர்த்தினி’ விருதும் வழங்கப்பட்டது. திருமதி ஸ்ருதி பிரியா என்ற கலைஞரும் அழைக்கப்பட்டு ‘ ஜகதா கலாவர்த்தினி’ விருது வழங்கப்பட்டது.

ஜகதாலயாவின் இந்த முதல் மார்கழி திருவிழாவில் பத்மஸ்ரீ நல்லி குப்புசுவாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதை வழங்கினார்.