வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், ’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில், பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, நாயகியாக உபாசனா ஆர்.சி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர் மக்கள் தொடர்பாளர் N.விஜயமுரளி கிளாமர் சத்யா .
கதைகளம் :குடிகாரன் வாழ்க்கை மையாமகவைத்து உருவாகி உள்ளது
இதுவரை குடிக்கு அடிமையான குடும்பங்கள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் அழுத்தமாகவும் நகைச்சுவையாகவும் எல்லோரும் ரசிக்கும்படியாக இருக்கிறது
நடிகர் தினேஷ் (டான்ஸ் மாஸ்டர்) கதாநாயகனவும் குடும்பம் பொறுப்பில்லாத குடிகாரனாவும் வழ்ந்து நடித்துள்ளார் நாயகியான உபாசான. சினி படத்தில் ஜீனியர் (துணை ) நடிகராக வேலை செய்கிறார் ஒரு நாள் திடீர் என்று கதாநாயன் குடியிருக்கும் தெருவில் நாயகி குடிவருகிறாள் நாயகன் அவளை பார்க்க நாயகி இவரை பார்க்க இப்படியாக கதை போய்கிட்டு இருக்கு
நாயன் உடன் தங்கை மற்றும் மாமன் இமான் அண்ணாச்சி இவர்களுடன் கோயில் சாமி கும்பிட திடீர் அதே கோயிலில் நாயகி வந்து சாமி கும்பிட அதே கோயில் ஊர் பிரமுகர் சாமிகும்பிட நாயன் நாயகியின் மணவாழ்க்கை நலம் விசாரிக்க இருவரின் திருமணத்தின் உண்மை போட்டு உடைக்க நாயகனுக்கு அவர் குடும்பத்தார்க்கும் அதிர்ச்சி ..நாயகன் திரு திரு முழிக்கிறார்.. நாயன் நாயகிக்கு திருமணம் நடந்ததா ? இல்லையா? படத்தின் மீதி கதை…
நாயகன் தினேஷ் மாஸ்டர் குடிகாரனாக வாழ்ந்து இருக்கிறார் நாயகி உபாசான சிறப்பான நடிப்பு கதையின் யோகி பாபு நாயகனின் நண்பனாகவும் சேர்ந்த மதுகுடித்தல் பாட்னராக நடித்துள்ளார் மற்றும் இவர்களுடன்
இமான் அண்ணாச்சி, சென்றாயன் வழக்கமாக சிறப்பாகவும் அவர்கள் நடிப்பு இருந்தது,சினிமாவில் படப்பிடிப்பு காட்சிகள் கூட்டனி சாம்ஸ், வையாபுரி ரெமோ சிவா, சிங்கம் புலி,, , வினோதினி நடிக்கும் காட்சிகள் கலகலப்பாகவும் சிரிப்பகவும் எல்லோரும் ரசிக்கும் படியாக உள்ளது இவர்களின் கூட்டனி வந்தாலே படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஜாலியாக இருக்கும் மற்றும் இதில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் ஒளிவீச்சு இரவு பகல் தன் பங்களிப்பை சிறப்பாக பணியாற்றியுள்ளார் :எடிட்டர் வெட்டுதல் ஒட்டுதல் சிறப்பாக செய்து உள்ளார் :பின்னனி இசை படத்திற்க்கும் பலம் அதுவே ஒலி சத்தம் குறைத்தும் பாடல் வரிகள் கேட்கும் படியாகவும் ரசிக்கும்படியாகவும் மனதில் ஒலித்து கொண்டே உள்ளது மீண்டும் மீண்டும் கே ட்கும் பாடலாக இருந்தது.
படத்தின் வசனங்கள் கதாநாயகி சில இடத்தில் பேசும் வசனங்கள் சாட்டை அடியாக இருக்கும். கிளைமேக்ஸ் காட்சி மற்றும் வசனம் இதுவரை எந்த படத்திலும் வரதா காட்சிகளும் வசனங்களும் . இயக்குனர் இக்கதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக திரைகதையமைத்து இப்படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் உங்களுக்கு என்னுடைய மனதார பாராட்டுகள்..
மொத்தத்தில் இப்படம் . குடிகாரனின் வாழ்க்கை அனைவரும் ரசிக்கும்படியாகவும் அமைந்துள்ளது
“லோகல் சரக்கு” தரமான அஃகு மார்க் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட படம்