சித்த மருத்துவர் Dr K வீரபாபு கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி பிண்ணனி இசையமைத்து கதாநாயகனாகவும் நடித்து ஜனவரி 25 ல் வெளியயிடப்பட்டது படம் முடக்கறுத்தான். இதில் சமூத்திரகனி ( கெஸ்ட்ரோல் .) காதல் சுகுமார், சாமஸ், அம்பாணி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிற்பியின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கிறது.அருள் செல்வனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.சூப்பர் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் சூப்பர்…சூப்பர் கதாநாயகனாக டாக்டர் வீரபாபு சண்டைக்காட்சிகளில் மிரட்டி அசத்துகிறார். நடிப்பிலும் நடனத்திலும் பரவாயில்லை மஹானா க தாநாயகியாக கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது நடிப்பு சிறப்பாக அருமையாகவும். இருந்தது. சமுத்திரக்கனி கெஸ்ட்ரோலில் ஒரு சில காட்சிகள் வந்தாளும் சிறப்பாக நடித்திருக்கிறார் மற்றும் இதில் நடித்திருக்கும் மயில்சாமி ,மூர்த்தி , காதல் சுகுமார், அம்பானி சங்கர், சாம்ஸ் என காமெடி கூட்டனி ரசிக்கும் படியாக இருந்தது இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்கும் குற்றத்தை கதைகருவாக வைத்து எடுத்து இருக்கும் இப்படம் எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியதோடு அரசு கவனத்திற்க்கு கோரிக்கையும் வைத்துள்ளார் பாராட்டுக்கள். நன்றிகள்