“மறக்குமா நெஞ்சம்” திரைப்பட விமர்சனம்.

நடிகர்கள் :

விஜய் டிவி ரக்ஷன் ஹீரோவாக (கார்த்திக்)மலினா (பிரியதர்ஷினியாக)தீனா (சலீமாக)ராகுல் (கௌதமாக)

ஸ்வேதா வேணுகோபால் (சரண்யா)ராகவ் (முத்தழகன்)
டென்னிஸ் (ஜோசப்பாகமெல்வின்) முனிஷ்காந்த் கார்த்திகேயனாக (PT master)அர்ஜுனாக அருண் குரியன்ஜெனிபராக அகிலா (கணித ஆசிரியர்)லிண்டோஷாவாக ஆஷிகா காதர்நடாலி லூர்ட்ஸ் ஷில்பாவாக யோகியாக விஷ்வத்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்தாளர் மற்றும் இயக்குனர் – ராகோ.யோகேந்திரன்
ஒளிப்பதிவாளர் – கோபி துரைசாமி
இசை – சச்சின் வாரியர்
தொகுப்பாளர்கள் – பாலமுரளி, ஷஷாங்க் மாலி
கலை இயக்குனர் – பிரேம் கருந்தமலை
பாடல் வரிகள் – தாமரை
ஆடை வடிவமைப்பாளர் – ரம்யா சேகர்
கூடுதல் திரைக்கதை – அக்ஷய் பூல்லா
கூடுதல் உரையாடல் – பிரசாந்த் எஸ், தீனா
ஒலி வடிவமைப்பாளர்கள் – சுகுமார் நல்லகொண்டா, ஸ்ரீகாந்த் சுந்தர் (தி சவுண்டஹாலிக்ஸ்)
ஒலி கலவை – ஜெய்சன் ஜோஸ் (நான்கு பிரேம்கள்)
வண்ணம் – வீரராகவன்
ஆடைகள் – நரேஷ்
ஒப்பனை – ரவி : பிஆர்ஓ சதீஷ் குமார்  : விளம்பர வடிவமைப்பு – ஹீட்ஸ் விளம்பர தொழில்நுட்ப தீர்வுகள்:வடிவமைப்பாளர்கள் – பிரிதிவி ராஜ், சுமன், முருகவேல், ஸ்ரீ ஹரி சங்கர், டப்பிங்ஸ்டுடியோ – கிராண்டா சவுண்ட் நிறுவனம்
டப்பிங் பொறியாளர் – காஷ்யப் ராம்மோகன், சாந்தோம் ஜோஸ்
ஸ்டில்ஸ் – புகழ்
VFX – Monolith Technologies Pvt Ltd, Tinge of Hues Post Factory, Chennai
தயாரிப்பு நிர்வாகி – செல்வா சண்முகம்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஸ்ரீராம் ஆனந்தசங்கர்
நிர்வாக தயாரிப்பாளர் – அனிருத் வல்லப்
தயாரிப்பு நிறுவனங்கள் – ஃபிலியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் குவியம் மீடியாவொர்க்ஸ்
தயாரிப்பாளர்கள் – ரகு எள்ளுரு – ரமேஷ் பஞ்சகுனுலா – ஜனார்தன் சௌத்ரி – ராகோ.யோகேந்திரன்

பத்தின் கதையை பார்ப்போம்: 2008ஆம் ஆண்டு, கன்னியாகுமரியில் உள்ள தனியார்  பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பு (பிளஸ்-2) படிக்கிறார் வாலிப ஆரம்பபருவ மாணவர் கார்த்திக் (ரக்‌ஷன்). சக மாணவர்களான சலீம் (தீனா), கௌதம் (ராகுல்), பிரியதர்ஷினி (மலினா), சரண்யா (ஸ்வேதா வேணுகோபால்) உள்ளிட்டோருடன் நெருக்கமான நட்புடன் பழகி, விளையாட்டு, அரட்டை என ஜாலியாக பள்ளி நாட்களில்  அனுபவிக்கும்  கார்த்திக், தனது நட்பு வட்டத்தில் இருக்கும் மாணவி பிரியதர்ஷினியை ஒருதலையாக, உயிருக்கு உயிராக காதலிக்கிறார். ஆனால் தன் காதலை சொல்ல தயக்கம் காரணமாக கண்எதிரே இருக்கும் பிரியதர்ஷினியிடம் என் உயிரே நீ தான் என்று சொல்ல முடியாமல் இயலாமல் காலத்தைக் கடத்த, பள்ளிப் படிப்பு காலம் அதற்குள்ளாக முடிந்து போகிறது. நண்பர்கள் பிரிகிறார்கள்.

கார்த்திக் சொந்தமாக தொழில் தொடங்கி நல்லபடியாக      போய்கிட்டு இருக்கு :2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் இவர்கள் 2008 ஆம் ஆண்டு பள்ளியில் எழுதிய பரிட்சையில் 100% தேர்ச்சியை முறைகேடு மோசடி செய்திருக்கிறார்கள். இதனால் அந்த ஆண்டு படித்த மாணவர்கள் அனைவரும் மூன்று மாதங்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து படித்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர், அங்கு என்ன நடக்கிறது என்பதே மறக்குமா நெஞ்சம் படத்தின் மீதிகதை.

நாயகன் முதன் முதலில் திரைப்படத்தில் அறிமுகமாகும் ரக்ஷ்ன் பள்ளி மாணவனாகவும் தொழில் நிறுவனம் நடத்தும் தொழிலதிபராக இரு பருவ காலங்களில் தன் நடிப்பை அழகாக நடித்துள்ளார்

கதாநாயகி மலினா இப் படத்தில் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்  +2மாணவியாக நடித்திற்க்கும் கதாபாத்திரம் பள்ளியில் படிக்கும் மாணவியாக சீருடையில் (யூனிபார்ம்) சரியான பொருத்தமாக இருந்தது சிறப்பு நாயகிக்கு அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார்

கதாநாயகனுடன் நண்பர்களாக வளம் வந்து நடித்த அனைவரும் கலகலப்பாக ஜாலியாக சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்து இருந்தார்கள்  சில இடங்களில் தீனா இவரை தாண்டி தெரிகிறார் நண்பர்களுக்கு அதிகமாக இடம் கொடுத்துள்ளார்

நாயகியுடன் நடித்த பள்ளி மாணவ தோழிகள் சிறப்பாக நடித்திருந்தனர்

இவர்களுடன் முனிஷ்காந்த் ஒரு சில காட்சிகள் வந்தாலும்  வழக்கமான காமெடி கதாபாத்திரமாக நடிக்காமல், ஒரு கேரக்டர் ரோலில் நடித்துள்ளார் சிறப்பாக இருந்தது

ஒளிப்பதிவாளர் – கோபி துரைசாமி ஒளிவீச்சு பகல் / இரவு பள்ளியின் வகுப்பறைகள் காட்சிகள் படபிடிப்புகள் அருமையாக இருந்தது

பின்னனிஇசை – சச்சின் வாரியர் படத்தில் பலம் இவர் தான்

எடிட்டர் : வெட்டுதல் சேர்தல் கர்ச்சிதமாக இருந்தது

இதில் பணியாற்றி அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் பணிகள் சிறப்பாக இருந்தது

மறக்குமா நெஞ்சம்.  ராகோ.யோகேந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்ஷய் பூல்லா கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார் பாராட்டுகள்

படத்தில் ஆபாச உடைகள் கவர்ச்சி ஆட்டம் இல்லை

இதுவரை யாரும் சொல்லாத கதைகளம் மொத்தத்தில் இப்படம் நம் பள்ளி பருவ காலங்களை நினைபடுத்தி நம்மை மகிழவைத்த இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் படகுழுவினர்க்கு வாழ்த்துக்கள்