நடிப்பு: விதார்த், திரிகுன், பூர்ணா, சுபஸ்ரீ, மிஷ்கின் மற்றும் பலர்எழுத்து & இயக்கம்: ஆதித்யா :ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துகுமார் :படத்தொகுப்பு: இளையராஜா.எஸ் இசை:மிஷ்கின் :தயாரிப்பு:மாருதி பிலிம்ஸ் & ஹெச் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள்:ஆர்.ராதாகிருஷ்ணன் & எஸ்.ஹரி மக்கள் தொடர்பு: சதீஷ் குமார்
படத்தின் தலைப்பு தான் ‘டெவில்’. நான் பயத்துடன் தான் இருந்தேன் ஆனால் படத்தில் பேயோ, பிசாசோ வருவதும் இல்லை, பயமுறுத்து வில்லை இப்படத்தின் , ‘டெவில்’ என்று எதைத் தான் சொல்கிறார்கள்? தெரிந்துகொள்வோம் ! வாருங்கள்… முதலில் கதையைப் பார்ப்போம்…
படத்தை பற்றி பேசுவோம் :
பிரபல வழக்கறிஞர் அலெக்ஸ் (விதார்த்). அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் கவர்ச்சிப்பெண் சோபியா (சுபஸ்ரீ). இருவருக்கும் இடையே ரகசிய செக்ஸ் உறவு இருந்து வருகிறது. இது தெரியாத அலெக்ஸின் பெற்றோர், அவருக்கு நல்ல குடும்பப் பெண்ணை நாயகி ஹேமாவை (பூர்ணா) பெண் பார்த்து, நிச்சயித்து, திருமணம் செய்து வைக்கிறார்கள். இதனால் கொதித்து எழுந்த கள்ளகாதலி சோபியா, அலெக்ஸின் முதலிரவில், அது நடக்க முடியாத அளவுக்கு அவருக்கு போன் பண்ணி தொந்தரவு செய்து, உடனே தன்னிடம் வருமாறு நச்சரிக்கிறார். வேறு வழியில்லாத அலெக்ஸ், “ஒரு அவசர வேலை” என்று புது மனைவியிடம் பொய் சொல்லிவிட்டுப் போய், சோபியாவுடன் காமதீயுடன் உல்லாசம் இருக்கிறார்
கணவர் தன்னை தொடக்கூட இல்லை என்றபோதிலும், அவர் மீது அனபும் பாசமும் குறையாமல் ஹேமா கணவரை பார்த்துக் கொள்கிறாள் கணவருக்கு பிடித்த சாப்பாடு போட்டு அசத்தலாம்னும் நினைத்து சாப்பாடு தயார் செய்து வைத்தும் சாப்பிடவில்லை அன்று சோபியா உடன் டின்னர் முடித்து வந்து விட்டாரர் . இரவு படுக்கறையில் பால் கொண்டு போனாலும் தூங்கிவிடுகிறார் திடீர்ரென்று அலெக்ஸின் அலுவலகத்தில் போய் நிற்கிறார். அங்கே அலெக்ஸும் சோபியாவும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்துகொண்டிருப்பதை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைகிறார். அலுவலகத்தை விட்டு வேகமாக வெளியேறுகிறார் பூர்ணா காரை வேகமாக ஒட்டி செல்ல எதிரில் பைக் ஒட்டி வந்த ரோஷன் (திரிகுன்) கார் மீது மோதி விட கீழே விழுந்து கிடந்த ரோஷனை மருத்துவ மனையில் சேர்கிறார் குணமடைகிறார் அவனுக்கு உதவியாக சாப்பாடு செய்து கொடுகிறாள் காரில் ஊர் சுற்றி காட்டுகிறாள் ரெஸ்ட்ராண்டு அழைந்து செல்கிறாள் பின்பு அதுவே நல்ல நட்பாக வளர்கிறது ரோஷன் அந்த நட்பு அடுத்த கட்ட வேற மாதிரியாக நகர்வதை உணர்ந்த பூர்ணா அவனை விட்டு விலகி வீட்டுக்கு வருகிறாள் ரோஷன் அவளை மறக்க முடியால் பூர்ணாவுக்கு போன் கால் (phone) வீட்டு வாசலில் நிற்கிறான் அவனக்கு அறிவுரை சொல்லி வீட்டுக்கு போகச் சொல்கிறாள் திடீர் விதார்த் அங்கு வர இருவரும் சண்டையிட்டு தாக்கி கொள்கிறார்கள் இதில் விதார்த் இறந்து விடுகிறான் இனி நடக்கப் போது என்ன என்பது தான் மீதி கதை …
இப்படத்தில் நாயகனாக நடித்த விதார்த் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரம் விதார்த் யாதர்த்தமான வக்கீலாகவும் சோபியாவிடம் முத்தமழை பொழியும் போதும் மனைவி பூர்ணாவிடம் மாட்டிக்கிட்டு தவறை உணர்ந்து வீட்டில் அழுகும் காட்சி கல்நெஞ்சையும் கரைய வைத்துள்ளது . சிறப்பாக நடித்துள்ளார் நாயகி பூர்ணா நடிப்பால் அனைவரையுடைய கவனத்தையும் ஈர்த்தாள் .. எதிர் நாயகன் ரோஷன் தனக்கு கொடுத்த கதாபாத்திரம் சரியாக கொடுத்துள்ளார் எதிர் நாயகி சோபியா விதார்த் உடன் காமதீயை காட்டி நடிக்கும் போது சிறப்பக உள்ளது
மிஷ்கின் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் சிறப்பாக இருந்தது
தொழில்நுட்ப கலைஞர்கள். : ஒளிப்பதிவு முத்துகிருஷ்ணன் இரவு காட்சியும் பகல் காட்சியும் அழகாக ஒளிவீச்சை கொடுத்துள்ளார்
இசையமைப்பாளர் மிஷ்கின் முதல் படம் என்று தெரியவில்லை இசை மற்றும் பின்னனி இசையும் சிறப்பு படத்திற்க்கு பலம் தரத்தை உயர்த்தி உள்ளது.பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது
கலை இயக்குனர் ஆண்டனி மரியா கெர்லி மாடர்ன் வடிவமைப்பு கொண்ட வீட்டை அழகா செய்துள்ளார்.
எடிட்டர் இளையராஜா.எஸ் காட்சிகளை கச்சிதமாக வெட்டுதல் ஒட்டுதல் செய்திருந்தாலும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் காட்சியை வெட்டி கொடுத்திருக்கலாம்.
இயக்குனர் ஆதித்யா கொடுத்திருக்கும் கதை
தம்பதிகள் தவறான பாதைக்கு செல்லும் கதையை மையமாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார் சொல்ல வந்ததை தடுமாற்றதுடன் இறுதி காட்சி இயக்குநர் ஆதித்யா, அதை குழப்பத்துடன் கொடுத்து இருக்கிறார் இன்னும் பயிற்ச்சி தேவை இருந்தாலும் அவரின் முயற்ச்சிக்கு பாராட்டு!
மொத்தத்தில் டெவில் பயமின்றி பார்க்கலாம்…