எஸ்ஆர் பிலிம் ஃபேக்டரி சார்பில் இமெயில் படத்தை தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஆர்.ராஜன்.
இதில் ராகினி திவேதி, அசோக் குமார், ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீP, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பெல்லி முரளி பார்க், அக்ஷய் ராஜ், வனிதா, ஆரஞ்சு மிட்டாய் பிரபா, ரத்னா, ஷைலு, ஸ்வேதா, தேஜஸ்வினி, தியா, அஜித் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை – அவினாஷ் கவாஸ்கர்,பின்னணி இசை – ஜூபின், ஒளிப்பதிவு – செல்வம் மாதப்பன், ஸ்டண்ட் – மாஸ் மதா, மக்கள் தொடர்பு : ஏ.ஜான்.
அம்மா வளரப்பில் வளரும் பாசமுள்ள மகள் அபி (ராகினிதிவேதி) , திடீரென்று அம்மா இறந்து விட அம்மா இறக்கும்முன் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனிடம் தன் சொத்துக்களையும் மகளையும் அபி ஒப்படைத்து இறந்து விடுகிறார் வேலைக்காரனால் அபியை கொடுமை படுத்துகிறார்கள் வேலைக்காரனால் ஏமாற்றபட்டு அனாதை இல்லத்தில் வளர்கிறார். படிப்பை முடித்தும்
சரியான வேலை கிடைக்காமல்; ரியல் எஸ்டெட் (வீட்டு மனை விற்பனை) விற்கும் மனோபாலாவின் ஆபீஸில் விருப்பம் இல்லாமல் அந்த வேலையை செய்ய அதிலும் சில பிரச்சனைகள் வந்து வேலையை விட நேர்கிறது. சிறு வயதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமுள்ள அபிக்கு ஒரு நாள் டை கேம் என் ஆன்லைன் கேமில் விளையாட ஆரம்பிக்கிறார். அதில் வரும் மூன்று நபர்களில் யார் இறப்பார்கள் என்று சரியாக கணித்தால் பணம் கிடைக்கும் என்பதையறிந்து விளையாட தொடங்கிறார். அந்த விளையாட்டின் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைக்க ஆரம்பிக்க, மகிழ்ச்சியாகும் அபி தீவிரமாக விளையாடுகிறார். இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விமல் (அசோக் குமாரை) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் ஆன் லைன் விளையாட்டால் அபிக்கு விபரீதம் ஏற்படுகிறது. முதலில் பத்து லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்து தரவேண்டும் என்ற நிபத்தனை கட்டாயத்தில் தள்ளப்படுகிறார். இந்த விளையாட்டு பிரச்சனையில் இருந்து தன் மனைவியைக் காப்பாற்ற முயலும் விமல் உயிருக்கு ஆபத்தும், தன் நெருங்கிய தோழிகளுக்கும் இன்னல்கள் ஏற்படுகிறது, இதனால் நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கும் அபி அதை எப்படி செய்கிறார்? அது என்ன பிரச்சனை? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சொல்வதுதான் ‘இ-மெயில்’.