“நரிவேட்டை” திரை விமர்சனம்.

இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷான், ஷியாஸ் ஹாசன் தயாரித்திருக்கும் நரிவேட்டை படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனுராஜ் மனோகர்.

இதில் டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், ப்ரணவ் தியோஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சுதி கேலிகட், ரினி உதயகுமார், அப்புன்னி சசி, குமார் சேது, உன்னி கிருஷ்ணன், வினோத் போஸ், தொம்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள் : எழுத்து : அபின் ஜோசஃப், இசை : ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவு : விஜய், கலை இயக்கம் : ஆ பவா, சண்டைப் பயிற்சி: ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரசூஃப் குருக்கள், படத்தொகுப்பு : ஷமீர் முஹமத், ஆடைகள் : அருண் மனோகர், நடன இயக்கம் : ஸ்பிரிங், படங்கள் : ஷைன் சபூரா, ஸ்ரீராஜ் கிருஷ்ணன்,தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: சாகேர் {ஹசைன், தயாரிப்பு நிர்வாகி : பிரதாபன் கள்ளியூர், மக்கள் தொடர்பு : ரியாஸ் அஹ்மத், பாரஸ் ரியாஸ்.

கதை

படம் ஓப்பனிங்கில் போலிஸிடமிருந்து தப்பிக்க டொவினோதாஸ் ஓட ஒரு கட்டத்தில் போலிஸ் டோவினோ தாமஸை வளைத்து பிடிக்கிறது. அப்போது,

ப்ளாஸ்பேக்கில் கதை ஆரம்பிக்கிறது. டொவினோ தாமஸ் கவர்மெண்டில் உயர் அதிகாரி வேலைக்குதான் செல்லவேண்டும் ஏன்ற குறிக்கோளோடு இருக்கிறார். அப்போது வேலையே இல்லாத காரணத்தை காட்டி காதலி அப்பா பெண் தர மறுக்க வீட்டில் உள்ளவர்களும் அனைவரும் பேசி திட்ட காதலி சொல்படி போலீஸ் கான்ஸிடபுள் வேலைக்கு செல்கிறார். புடிக்காத வேலை என்றாலும் யுனிபார்ம் போட்ட தைரியத்தில் ஒருவரை டொவினோ தாக்க, அவரை பெரிய போலிஸ் அதிகாரியே கண்டிக்கின்றனர். 

வயநாடு காட்டுப் பகுதியில் வசிக்கும்  பழங்குடி மக்கள் தங்களின் நிலம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்கள் நடத்துகிறார்கள். அங்கு பதட்டத்தை கட்டுப்படுத்த அதை ஒடுக்க நினைக்கிறது அரசு. அங்கே பாதுகாப்பு பணிகளை போலீஸ் அதிகாரி சேரன் தலைமையிலான டீம்  அரசாங்கம் அனுப்புகிறது இந்நிலையில் பழங்குடி மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாததால் சேரன் போலீஸ் புத்தியை பயன்படுத்தி போராட்ட மக்கள் மீது கொலை பழியை சுமத்துகிறார்கள் .இதனால் மக்கள் போராட்ட களத்தில் பெரும் மோதல்கள் உருவாகிறது அப்பொழுது டொவினோதாமஸ் வாழ்க்கையே மாற்றும் பல சம்பவங்கள் நடக்ககிறது. அது ஏன்ன? சாதாரண போலீஸ்காரரான டொவினோ என்ன செய்தார். எப்படி பாதிக்கப்பட்டார். அந்த மக்களுக்கு நீதி கிடைத்ததா என்பது டோவினோ ஏன் போலீஸ் பிடித்தது? ஊரில் உள்ள மக்களின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

டொவினோ போலிஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.சேரன் போலிஸ் ஆதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். கதாநாயகியின் அளவான நடிப்பும் அழகும் ரசிக்கவைக்கிறது.

சூராஜ் வெஞ்சரமூடு நடிப்பும் அருமை. மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜோயின் இசை படத்திற்கு பெரிய பலம்.

விஜய்யின் ஒளிப்பதிவு  இரவு  நேரத்தில் காட்சிகள் சரியான பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

இயக்குநர் அனுராஜ் மனோகர் அரசு மற்றும் அதிகாரிகளால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வாழ்க்கை வலியை   மையமாக கருவாக கொண்டு உருவாக்கிய கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.இப்படம் மலையாளம், தமிழில் வெளி வந்துள்ளது.பாராட்டுக்கள்.