படை தலைவன்” திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் !! 

“படை தலைவன்” திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் !!

“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது !!

VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ்குமார், படத்தொகுப்பு அகமத்

இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளார்..

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது. பெரும் பொருட் செலவில் vj Combines நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, A.வெங்கடேஷ், S.S.ஸ்டான்லி, லோகு N P K S, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு – VJ Combines –  

  கதை இயக்கம் – U அன்பு 

திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு

இசை – இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார்

படத்தொகுப்பு – அகமத்

ஸ்டண்ட் – மேத்யூ மகேஷ்

கலை இயக்கம் – P ராஜு

ஸ்டில்ஸ் – சக்திபிரியன்

 

பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்