ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் தயாரித்திருக்கும் குபேரா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சேகர் கம்முலா.
நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சுனைனா, சாயாஜி ஷிண்டே, தலிப் தஹில், பாக்யராஜ், ஹரிஷ் பேரடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினர்கள் :- – , இசை – தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பு – தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் – நிகேத் பொம்மி, எடிட்டர் – கார்த்திகா ஸ்ரீPனிவாஸ் ஆர், இணை எழுத்தாளர் – சைதன்ய பிங்கலி, இரண்டாவது யூனிட் இயக்குனர் – சூரி ரவிக்குமார், அதிரடி இயக்குனர் – ‘ஸ்டண்ட்ஸ்’ ஸ்ரீ, விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்கள் – அசோக் மொச்சார்லா, நாகு தலாரி, ஆடை வடிவமைப்பாளர்கள் – காவ்யா ஸ்ரீராம், பூர்வா ஜெயின், விளம்பர வடிவமைப்பாளர் – கபிலன், நிர்வாக தயாரிப்பாளர் – இரலா நாகேஸ்வர ராவ், இணை தயாரிப்பாளர் – அஜய் கைகாலா, தமிழ் உரையாடல்கள் – அகோரம் பன்னீர்செல்வம், ஆடியோ : ஆதித்யா மியூசிக், தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு – ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், பிஆர்ஒ- ஏய்ம் சதீஷ்
கதை கரு
தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் செய்யும் ஊழல் கருப்பு பணத்தை, அதை வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்து அதை வெள்ளையாக எப்படி மாற்றுவது:
படத்தை பார்ப்போம்:
மத்தியரசின் நீண்ட கால முயற்ச்சியில் கடலில் (எண்ணெய் கிணறு) எரிவாயு கிடைக்கிறது இரவு நேரத்தில் நடக்கிறது இந்த எரிவாயு கண்டுபிடிப்பை இங்கு வேலை பார்க்கும் உயர் அதிகாரி மூலம் இந்தியாவின் பெரும் பணக்கார தொழிலதிபர் நீரஜ் மித்ரா (ஜிம் சர்ப்) சொல்லப்படுகிறது இவர் எண்ணெய் கிணறு கைபற்ற திட்டம் தீட்டி அங்கு வேலை பார்க்கும் உயர் அதிகாரி மூலம் செயல்படுத்துகிறார். இது ஒரு பக்கம் இருக்க மற்றெரு பக்கம் மத்தியமைச்சர் சித்தப்பா (ஹரிஷ் பேரடி) மூலம் சரிகட்ட லஞ்சம் பேரம் ஒரு லட்சம் கோடி 50 ஆயிரம் கோடி White வெள்ளையாகவும், மீதி 50 ஆயிரம் கோடி கருப்பு Black பணமாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்குமாறு பட்டியலிட்டு மத்திய அமைச்சர் கொடுக்க, அதற்கு தருவதாக ஒப்பு கொண்டார் தொழிலதிபர் நீராஜ் . இந்த பண பரிமாற்றம் எப்படி செய்வது ? இதற்க்கு சரியானவர் புத்திசாலி யார் என்று தேடும் போது.. நேர்மையானவர் குடியரசு தலைவரிடம் விருது பெற்றவர் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகர்ஜுனா இவர் பொய் வழக்கில் 10 – ஆண்டு சிறை தண்டனையில் இருக்கிறார் இவரை அரசாங்கம் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தார் . அரசாங்கம் இவரை கைவிட்டது . இதை தெரிந்து கொண்ட பெரும் தொழிலதிபர் நீரஜ் மித்ரா தன் பக்கம் இழுக்கிறார் முதலில் மறுத்த நாகர்ஜுனா பிறகு தன் (குடும்பம் குழந்தை )ஒப்புகொள்கிறார், சிறையில் இருந்து வெளியில் வருகிறார் . இவரின் ஆலோசனை திட்டத்தால் லஞ்சப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற 50 ஆயிரம் கோடி பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டுவிட்டு, போலியாகச் சில பினாமிகளை உருவாக்க முடிவெடுக்கிறார். அவர்களுக்கு உறவினர் ,நண்பர்கள் யாரிடமும் தொடர்பு இல்லாத அப்பாவியாக இருக்கனும் அவர்களுக்கு எழுத படிக்க தெரியகூடாது இப்படியானவர்கள் இருக்க தகுதியானவர் அதற்காக இந்தியா முழுவதும் தேடி சுற்றி அலைந்து படிப்பறிவில்லாத, எதுவுமே தெரியாத தனுஷ் (தேவா )உள்பட, இரு ஆண் ஒரு பெண் கர்ப்பினி ( கதாபாத்திரத்தில் அவள் பெயர் குஷ்பு )நான்கு ( 4 ) அப்பாவி பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை . பல் தேய்க்க -சாப்பிடும் முறை / கையெழுத்தும் மட்டும் போடுவது /உடை / நடை மாற்றம் பயிற்சி கொடுத்து அவர்களைப் பணக்காரர்களைப் போல நடிக்க தயார் செய்கிறார்கள் , தங்களின் காரியம் முடிந்த உடன் எந்த ஒரு தடையமும் இருக்கக் கூடாது என்று அவர்களை கொல்ல ரகசியமாக முடிவு செய்கிறார் இதனால் ஒரு பிச்சைகாரனின் பண பணபரிமாற்றம். முடிந்தவுடன் அவனை கடலில் தள்ளி கொன்றுவிடுகிறார்கள் தொழிலதிபர் நீரஜ் மித்ரா – யின் அடியாட்கள் . இது நாகர்ஜுனாவிற்க்கு தெரிய வருகிறது இதை அவரிடம் கேட்க நீ என்னிடம் வேலை செய்றவன் உனக்கு தேவையில்லாத விஷியம் போய் உன் குடும்பத்தை உன் வேலை மட்டும் பார் கூறிவிடுகிறார் .இருந்தாலும் நாகர்ஜுனா மனசாட்சி ஒப்பவில்லை இருந்தாலும் பிச்சைகார்களை காப்பாற்ற முடியவில்லை, தொழிலதிபருக்கு விஸ்வாசமாக இருக்கிறார் இதை தெரிந்து கொண்ட தனுஷ் அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே வருகிறார். இரயில் நிலையத்தில் வந்து மயங்கி விழுந்து கிடக்கிறார் . அந்த நேரத்தில் இரயில் நிலையத்தில் தன் பாய்பிரன்ட் க்காக காத்திருந்த கதாநாயகி ராஷ்மிகா , தனுஷ் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டு பசிக்கு சாக்லெட் கொடுக்கிறார் . மயக்கம் தெளிந்த உடன் ராஷ்மிக (cell phone) செல்போன் -யிருந்து தனுஷ் நாகர்ஜுனாவுக்கு போன் போட எடுத்து பேசவில்லை நாகர்ஜுனா சிறிது நேரம் கழித்து நாகர்ஜுனா அந்த செல் நெம்பருக்கு போன் போட கதாநாயகி பேச உங்களுக்கு போன் Phone நான் போடவிலை ரயில் நிலைத்தில் நடந்தை கூற உடனே அடுத்த சில நிமிடத்தில் நாகர்ஜுனா அவருடன் தொழிலதிபரின் அடியாட்கள் ரஷ்மிகா -விடம் வந்து விசாரிக்கிறார்கள் . தனுஷ் தன்னுடன் தங்கியிருந்த பிச்சைகாரர் கர்ப்பினி பெண்ணை காப்பாற்ற மீண்டும் தொழிலதிபர் பங்களாவில் நாகர்ஜுனாவை பார்க்க செல்கிறார் இந்த தகவலை செக்யூரிட்டி மூலம் வெளியில் இருக்கும் நாகர்ஜுனா போகிறது உடனே வருகிறார் தனுஷ் பங்களாவில் இல்லை அங்கிருந்து எஸ்கேப் காரணம் அந்த பங்களாவில் பிச்சைகார கர்ப்பினி (குஷ்பு )பெண் காணவில்லை. தனுஷ் எப்பவும் இந்தியாவில் இருக்கும் பிச்சை கார்களும் அவர்களுக்கு இருக்கயிடம் கல்வி, மருத்துவம் , அவர்களின் இறப்பு நல்ல இருக்கனும் மீண்டும் பிச்சைகார வாழ்க்கை அவர்களுக்கு கிடைக்க கூடாது ! என்ற மனநிலையில் உள்ளவர் .தொழிலதிபர் நீரஜ் மற்றும் நாகர்ஜுனா தங்களின் லஞ்சப் பண பரிமாற்ற வெளி உலகிற்கு தெரிந்து விடப் போகிறது என்ற பதட்டத்தில் தனூஷ்யை தீவிரமாக தேடுகின்றனர். மீண்டும் ராஷ்மிகா சந்திக்க நேரிடுகிறது. அவரின் செல்போன் மூலம் தனுஷ் -நாகர்ஜுனாவுக்கு தொடர்பு கொள்ள முயற்சிக்க முடியாமல் போகிறது. அந்த செல்போன் சிக்னல் மூலம் தனுஷ் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கும்பலிடமிருந்து தனுஷ் தப்பித்தாரா? பிச்சைகார கர்ப்பினி பெண் நிலையென்ன ? ரஷ்மிகா தன் பாய்பிரன்ட் வுடன் சேர்ந்தார்களா? அவர் சந்திக்கும் பிரச்சனை என்ன? நாகர்ஜுனா நேர்மையான சிபிஐ அதிகாரி விலை போக காரணம் என்ன? நல்லவரா? கெட்டவரா ? தனுஷ ஆசை நிறைவேறியதா? கடலில் கண்டுபிடிப்பு எண்ணெய் கிணறு யாருக்கு சொந்தமாகியது ! உங்கள் பல கேள்விகளுக்கு படத்தின் மீதி கதை.
நடிகர் பல கதபாத்திரங்கள் செய்து யிருந்தாலும் இப்படத்தில் அற்புதமான நடிகர் தனுஷுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு, ஒரு பிச்சைக்கார கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க அவர் எல்லாவற்றையும் செய்துள்ளார். இறந்த பிச்சைகாரன் உடல் அடக்கம் செய்ய எடுக்கும் முயற்ச்சி அவர்களுக்கு மரியாதை சில இடங்களில் அவரது வசனம், உடல் மொழி எதுவாக இருந்தாலும், இது பலமுறை நம்மை வியப்பில் ஆழ்த்தியது அசுரன் பட வரிசையில் சிறந்த நடிகராக வரலாம் இவருக்கு அரசு விருது வழங்கலாம் !
நாகார்ஜுனாவின் கதாபாத்திரத்தின் மையக்கரு வலுவானது, இருந்தாலும் இன்னும் சிறப்பாக பயன்படுத்திருக்கலாம் தொழிலதிபரின் விஸ்வாசம் அதிக முக்கியத்தும் கொடுத்துள்ளார் .
ரஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் சிலகாட்சிகள் வந்து கடைசி காட்சி உடன் இருக்கிறார் சிறப்பு .
தொழிலதிபர் வில்லனாக வரும் ஜிம் சர்ப்பும், கொஞ்சம் கூட இரக்க மில்லாத .பணக்கார தொழிலதிபராக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். அவருக்கு திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.
பாக்யராஜ் சாமியராக நடித்திருக்கும் காட்சி அவரை நமக்கு அடையாளம் தெரியாது இருந்தாலும் அவருடை பேச்சை வச்சி தான் நாம் தெரிந்த கொள்ள முடியும். ஒரு சில காட்சிகள் மட்டும். வருவார்.
இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பு
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஹைதராபாத், திருப்பதி, போன்ற நகரங்கள் இரவு, பகல் , பெரும் பணக்காரன் பங்களா மற்றும் துரத்தி ஒடும் காட்சி ஒளிவீச்சு சிறப்பான பதிவு படத்துக்கு பலம்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடலிசையும், பின்னணி இசையும் படத்துடன் இணைந்து ஸ்கோர் செய்கிறார் .
நம் நாட்டில் பெரும் பணக்காரர் தொழிலதிபர்கள் வியாபார போட்டி – எந்த லெவளுக்குக்கும் போவார்கள் ’ என்பதை அடித்தளமாகக் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய வித்தியாசமான திரைக்கதை அமைத்து, காமெடி / ஆபாசம் கிளாமர் கத்தி ,ரத்தம் சன்டை காட்சி இல்லாமல் விறு விறுப்பாகவும் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார், இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா . பாராட்டலாம் மொத்தப்படத்தின் நீளத்தை 20 நிமிடம் மணி நேரம் குறைத்து, படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
‘குபேரா’ – முற்றிலும் வித்தியாசமான அனுபவம்! தனுஷின் அற்புதமான நடிப்பை ரசிப்பதற்காகவே குடும்பத்துடன் பார்க்கலாம்!
ரேட்டிங்: 4/5.

