டி. ஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறனர் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ்.
இதில் வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்த் ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹ{சைனி, சூர்யா கணபதி, சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-வியூகத் தலைமையாளர் : டாக்டர் மனோஜ் பெனோ, இசை : டி. இமான, பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, கருணாகரன், சூப்பர் சுப்பு, ஆஃப்ரோ, ஒளிப்பதிவு : டிஜோ டோமி, படத்தொகுப்பு : சுரேஷ் யு பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பாளர் : அருண்சங்கர் துரை, ஆடை வடிவமைப்பு : தக்ஷா தயாள், ஒப்பனை : அப்துல்லா,சண்டைப் பயிற்சி : ‘டான்’ அசோக், நடனம் : அஜய் ராஜ், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : மணிகண்டன், தயாரிப்பு நிர்வாகி : வேணுகோபால், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்
கேங்ஸ்டர் முதலாளியான ஷிஹான் ஹ சைனி அடியாளாக வேலை செய்து வந்தார் லிவிங்ஸ்டன் அனாதை சிறுவர்களான வைபவ் மற்றும் மணிகண்டன் இருவரையும் மகன்களாகவும் சிஷியனாக வளர்கிறார். இவர்கள் சின்ன திருட்டுக்களை செய்து சிக்கினால்,லிவிங்ஸ்டன் தான் தன் செல்வாக்கை வைத்து இவர் களை மீட்பார். லிவிங்ஸ்ட னுக்கு ஒரே மகள் அதுல்யா ரவி வெளிநாட்டில் படித்தவர் அப்பா உடன் இருக்கிறார் வைபவ் (பாண்டி.)அதுல்யா ரவி இருவரும் காதலர்கள் ஆகிவிட்டார்
லிவிங்ஸ்டன் குருநாதர் கேங்ஸ்டர் முதலாளியான ஷிஹான் ஹ சைனி குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க இன்சூரன்ஸ் பெரும் பணத்தை பெற தன் வீட்டில் பணம், நகைகளை கொள்ளையடிக்குமாறு நாடகம் திட்டம் போட் டு லிவிங்ஸ்டனிடம் கொடுக்கிறார் உடனே தன் சிஷியர்கள் இருவரும் வைபவ் மணிகண்டனிடம் இந்த திட்டத்தை ஒப்படைக்கிறார் இவர்கள் செயல்படுத்த கிளம்பிட்டார்கள் திட்டம் போல் பணம் ,நகை கொள்ளையடிக்கபட்டது கொள்ளையடித்த பணமும் நகையும் டாஸ்மாக் மதுகடை மதுகுடித்து தவறவிட்டார்கள் .
லிவிங்ஸ்டன் குருநாதர் கேங்ஸ்டர் முதலாளியான ஷிஹான் ஹ சைனி என்ன பதில் சொல்லறது என்று யோசிக்க, ரெடின் கிங்ஸ்லி) மூலம் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் ,சுனில் ரெட்டி ஜான் விஜய் ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து நகைக்கடையை கொள்ளையடிக்க திட்டம் போட்டு செயலில் தோல்வியடைதந்து மீண்டும் வங்கியை கொள்ளையடிக்க திட்ட தீட்டுகிறார்கள் வங்கியின் அருகில் ஒரு பீஸ்ஸா உணவகத்தை திறந்து,அங்கிருந்து சுரங்க பாதை வழியாக சென்று கொள்ளை அடிக்க சுரங்க பாதை தோண்டு கிறார்கள் இதில் இந்த கூட்டணி வெற்றி பெற்றதா? வங்கியை கொள்ளையடிக்க முடிந்ததா? சலீமின் பணத்தை திருப்பி கொடுத்தார்களா? வைபவ் காதல் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதி கதை..
வைபவ், அதுல்யா ரவி, மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், ஷிஹான் ஹ{சைனி, சூர்யா கணபதி, சாம்ஸ் ஆகியோர் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளனர் என்றாலும், சிரிக்க வைக்க முயறச்சி செய்கிறார்கள்.
இமானின் இசை மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி காட்சிபதிவு சிறப்பு எடிட்டர்: சுரேஷ் ஏ பிரசாத்தின் எடிட்டிங் என அனைவரும் படத்திற்க்கு சிறப்பாக பணி யாற்றியுள்ளனர் .
கேங்ஸ்டர் கதையில் காமெடி கலந்து கலகலப்பான நகைச்சுவை நடிகர் பட்டாளங்கள் இருந்தும் திரைக்கதையில் கவனம் செலுத்தி யிருக்க வேண்டும் சினிமா பின்னனி கொண்ட இரட்டை இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ். உங்கள் முதல் முயற்சி பாராட்டுக்கள். சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் சிரிக்க வைக்கும் முயற்சி … தொடரட்டும்… வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்.

