“கண்ணப்பா” பிரம்மாண்ட பொருட்செலவில் ஆன்மிக திரைப்படம் ‘. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரலாற்று பின்னணியில் கடவுள் இல்லை என்று நாத்திகன் ஆக இருந்ததவன் தீவிர சிவன் பக்தன் கண்ணப்பரை பற்றிய கதை இப்படம் .
கதைக்களம்
இரண்டாம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் காளஹஸ்தி பகுதியில் சரத்குமார் மகனாக தின்னா (விஷ்ணு மஞ்சு) தனது இன மக்களுடன் வாழ்ந்து வருகிறார்.
சிறு வயதில் தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்டதை நேரில் பார்த்த தின்னா, கடவுளே இல்லை எல்லாம் வெறும் கல்தான் என்று கூறி ஒரு கல்லை எடுத்து சாமி மீது எறிகிறான் அந்த கல் பூசாரி பெண் கன்னத்தில் பட்டு சிறிய காயங்கள் ஏற்படுகிறது. ஹீரோ தெய்வ நம்பிக்கை இல்லாமல் நாத்திகனாக வளர்கிறார். அதே சமயம் மஹாதேவ சாஸ்திரி (மோகன்பாபு )தீவிர வாயுலிங்கம் பக்தர் எனக்கு மட்டும் சொந்தம் வாயுலிங்கம் ஆணவ சாஸ்திரி பிறரை அனுமதிக்காமல் தான் வழிபட்டு வரும் வாயுலிங்கத்தை கைப்பற்ற ஒரு கூட்டம் காளஹஸ்தி பகுதிக்கு வருகிறது அந்த கூட்டத்தை தின்னா (ஹீரோ) அடித்து நொறுக்கிறார் காலமுகனின் தம்பி கொலை செய்யபடுகிறது.
இதற்கிடையில், பார்வதி தேவி சிவபெருமானிடம் உங்களை கல் என்று கூறிக்கொண்டு இருக்கும் தின்னா எப்படி உங்கள் பக்தனாக மாறுவான் என்று கேட்க, அவன் ஒருமுறை எனது பெயரை சொல்லி அழைத்தால் போதும் என்று சிவபெருமான் பதிலளிக்கிறார்.
இந்த நிலையில், மிகப்பெரிய படையுடன் காலமுகன் வாயுலிங்கத்தை கைப்பற்ற வருகின்றான் இந்த பெரும் படையை சமாளிக்க தின்னாவின் அப்பாவான சரத்குமார், 5 பட்டியை சேர்ந்த இனமக்கள் கருத்தால் வேறுபாட்டு பிரிந்கிடக்கிறார்கள் அவர்களை ஒன்றாக வேண்டும் என அழைக்கிறார் .அனைவரும் ஒன்று கூடினார்கள் அப்போது தின்னாவால் அங்கு பிரச்சனை ஏற்பட தின்னா-வை அங்கிருந்து அவரை சரத்குமார் தங்கள் (பட்டியை) பகுதியை விட்டு வெளியேற்றுகிறார்.
அதன் பின்னர் காலமுகனின் படையை தின்னா வென்றாரா? மஹாதேவ சாஸ்திரி அந்த பகுதி இன மக்கள் வாயுலிங்கம் தரிசிக்க அனுமதி தந்தாரா? தின்னா கடவுளை நம்பி பக்தனாக மாறினார்? என்பதே மீதிக்கதை….
விஷ்ணு மஞ்சு தின்னாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் மிரட்டும் அவர், ரொமான்ஸ், எமோஷன் என எல்லாவற்றிலும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். குறிப்பாக கிளைமேக்சில் சிறப்பாக அனைவரும் கவனத்தை ஈர்த்த காட்சி செய்திருக்கிறார். அதேபோல் பிரபாஸ் வரும் காட்சிகள் அமைதியாக. வந்து சென்றாலும் அவர் பேசும் வசனங்கள் சிறப்பு.
‘தாயின் புனிதமான கருவறையில்தான் நீங்களும் நானும் பிறந்தோம்’, ‘என்னால் முடிந்தவற்றைத்தான் இறைவனுக்கு படைக்க முடியும்’, ‘மனித இரத்தத்தை கேட்பது கடவுளா’ என பெரும்பாலான வசனங்கள்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. சிவனை அனுதினமும் வணங்கும் தீவிர பக்தி பெண்ணாக நடித்திருக்கும் பிரீத்தி முகுந்தன், கடவுள் கல் என்று கூறும் விஷ்ணு மஞ்சுவிடம் இறைவன் இருக்கிறான் என்று வாக்குவாதம் செய்யும் காட்சி சிறப்பு
அதேபோல் பிரீத்தியிடம் ‘பக்தியை வலிந்து திணிக்கக்கூடாது’ என பிரபாஸ் விளக்கம் கொடுக்கும் காட்சியும் அருமை
மஹாதேவ சாஸ்திரியாக வரும் மோகன்பாபு வாயுலிங்கம் எனக்கு மட்டும் சொந்தம் என ஆணவ சாஸ்திரியாக ஆரம்ப முதல் கடைசி காட்சி வரை நடிப்பு சிறப்பு மற்றும் மோகன் லால் _விஷ்ணு மஞ்சு சிறிய மோதல் ஏற்பட்டு கத்தி மேல் நிற்கும் அந்த காட்சியும் நம்மை ரசிக்க வைக்கிறது சிறப்பு, பிரபாஸ் வரும் காட்சி சிறப்பாக இருந்தது இவர் அனைவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சரத்குமார், மதுபாலா, தேவராஜ்,சம்பத் ராம் ஐஸ்வர்யா ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரங்களில் கச்சிதமாக செய்துள்ளனர்.
சிவ பெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதைதான் இந்த ‘கண்ணப்பா’. தற்போதைய ஆந்திர பிரதேசத்தின் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் நடந்ததாக கூறப்படும் புராண கதையை கற்பனை சேர்த்து கதை, திரைக்கதை எழுதியுள்ளார் படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சு.
நடிகர் மோகன் பாபு தயாரிக்க முகேஷ் குமார் சிங் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். அக்சய் குமார் சிவனாகவும், காஜல் அகர்வால் பார்வதிதேவியாகவும் நடித்துள்ளனர். கௌரவ வேடங்களில் பிரபாஸ், மோகன் லால் ஆகியோர் நடிக்க, தின்னா எனும் கண்ணப்பனாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ்தான் என்றாலும், முடிந்தவரை அதனை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கடவுளை வெறுக்கும் ஒருவன் எப்படி மனம் மாறி, தனது கண்களையே எடுத்து கடவுளின் சிலைக்கு கொடுக்கிறான் என்பதுதான் கதை என்றாலும் 3 மணிநேரத்திற்கு திரைக்கதை அமைத்திருக்கிறார் விஷ்ணு மஞ்சு.
முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இடைவேளை நெருங்கும்போது நிமிர வைக்கிறது. அதன் பின்னரான இரண்டாம் பாதி வேகமெடுக்கிறது.
.படத்தின் நீளம் என்பது பலருக்கும் குறையாக தோன்றலாம்.உண்மை கதைக்கு படத்தின் நீளம் தேவை
ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்
இசை
ஸ்டீபனின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக இருந்தது
.ஸ்டீபன் தேவஸியின் இசை திரைக்கதைக்கு வலுசேர்க்கிறது. அந்தோணியின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். இருந்தாலும் விறு விறுப்பாக கதை நகர்கிறது
ஹீரோ ரோமன்ஸ் செய்வது இப்போது வரும் பட காட்சிகள் போல் உள்ளது கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் கதையின் உன்மை தன்மை சிதைய கூடாது என ஆங்காங்கே உள்ள சில குறைகளை இயக்குநர் சரிசெய்திருக்கலாம். என்றாலும் மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிக்கும்படியான புராண படமாக அமைந்துள்ளது இந்த கண்ணப்பாவை கண்டிப்பாக குடும்பத்துடன் ரசிக்கலாம்.

