நடிகர்கள் :
எம்.சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மு ராமசாமி, சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ், சரவணன், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, மணிகண்டன்
படக்குழு விவரங்கள் :
தயாரிப்பு: பாண்டியன் பரசுராமன்
இணை தயாரிப்பாளர்: சுஜாதா பாண்டியன்
சத்யசிவா எழுதி இயக்குகிறார்
இசை: ஜிப்ரான்
ஓளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார்
படத்தொகுப்பாளர்: ஸ்ரீகாந்த் என்.பி
கலை: சி.உதயகுமார்
பாடல் வரிகள்: சினேகன் – மோகன் ராஜன் – அருண் பாரதி
அதிரடி: டி.ரமேஷ் – டான் அசோக் – டேஞ்சர் மணி
ஆடை வடிவமைப்பாளர்: சிவரஞ்சனி
ஒலிப்பதிவு: ஹரிஷ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு சில கற்பனை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் Freedom. . இப்படத்தை பற்றி பார்க்கலாம் .
முன்னாள் பிரதமர் அவர்கள் படுகொலை செய்யபட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள படம் ‘Freedom’.
ஒரு நாள் இரவு. இலங்கையில் உள் நாட்டு போர் நடக்கும் நிலையில் அங்கே உள்ள தமிழர்கள் பலர் அடைக்கலம் தேடி கள்ளதோனி வழியாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள் வருபவர்களை தமிழ் நாடு அரசு ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கிறது. இப்படி வந்தவர்களில் மாறனும் (சசி குமார்) செல்வியும் (லிஜா மோல்) கணவன் -மனைவி. செல்வி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் முன்னாள் பிரதமர் தமிழ் நாட்டில் ஒரு மனித வெடி குண்டால் கொல்ல படுகிறார். இந்த குண்டு வெடிப்பிற்கும், அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொள்ளும் தமிழ் நாடு காவல் துறை, முகாமில் இருக்கும் சிலரை ‘இரண்டு நாட்களில் விசாரணை செய்து விட்டு திருப்பி அனுப்பி விடுகிறோம்,’ என்று வேலூர் கோட்டை சிறைக்கு அழைத்து செல்கிறது. அங்கே அகதிகளை மிகவும் கொடுமையான முறையில் அடித்து சித்தரவதை செய்கிறது. இரண்டு நாட்களில் திருப்பி அனுப்புகிறோம் என்று சொன்ன அரசு தரப்பு, ஐந்தாண்டுகள் வரை அனுப்பவில்லை. அகதிகளின் குடுபத்தினர் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் இவர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்பும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்ய அரசு மறுக்கிறது வேறு வழி இல்லாமல் அகதிகள் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள் சிறையிலிருந்து தப்பித்தார்களா ? அகதிகள் விடுதலை பெற்றார்களா? இல்லையா?என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சசிகுமார், இலங்கை தமிழ் பேச்சு வழக்கில் மிக இயல்பாகவும், உணர்ச்சிகரமாகவும் நடித்து அனைவரையும் கவர்கிறார். அவரது நடிப்பு படத்தின் மையப் பலமாக அமைகிறது. லிஜோமோல் ஜோஸ், கதாநாயகியாக முக்கியமான பாத்திரத்தில் நடித்து அனைவரும் கவனத்தை ஈர்த்துள்ளார் சுதேவ் நாயர் வில்லனாகவும், இவர் களுடன் அகதிகளின் முகாமில் போலீஸ் அதிகாரியாக போஸ் வெங்கட், சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் மற்றும் மாளவிகா, மணிகண்டன் உள்ளிட்டோர் துணைப் பாத்திரங்களிலும் சிறப்பாக பங்களித்துள்ளனர்.
தொழில்நுட்ப அம்சங்கள்: ஜிப்ரானின் இசை படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களை மேலும் உயர்த்துகிறது. ஒளிப்பதிவு, சிறைச் சூழலையும், அகதிகளின் வலியையும் தத்ரூபமாக பதிவு செய்கிறது. ,
படத்தொகுப்பாளர்: ஸ்ரீகாந்த் என்.பி சிறப்பாக தன் பணியை செய்துள்ளனர்.
இயக்குனர் சத்யசிவா ஈழத் தமிழர்களின் வாழ்க்கையின் வலி யும் இடைவேளைக்கு பிறகு திரைஒட்டம் விறு விறுபாக சொல்லியுள்ளார் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத உங்கள் முயற்சி சிறப்பு பாராட்டுக்கள்

