நடிகர்கள்: சரவணன், நம்ரிதா, ஆரோல் டி சங்கர், சண்முகம், திருசெல்வம், விஜயஸ்ரீ, இனியா ராம்
படக்குழுவினர்:
எழுத்தாளர் – நிகழ்ச்சி நடத்துபவர்: சூரியபிரதாப் எஸ்
இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
தயாரிப்பாளர்: சசிகலா பிரபாகரன்
தயாரிப்பு: 18 கிரியேட்டர்ஸ்
ஒளிப்பதிவு: எஸ் கோகுலகிருஷ்ணன்
எடிட்டர்: ராவணன்
இசையமைப்பாளர்: விபின் பாஸ்கர்
கலை இயக்குனர்: பாவனா கோவர்தன்
பாடலாசிரியர்: ஸ்ரீனி செல்வராஜ்
ஆடை ஒப்பனையாளர்: மரியா மிலன் மக்கள் தொடர்பு: சதீஷ், சிவா (AIM)
இணையத் தொடர் பார்ப்போம்;
நீதிமன்றத்திர்கு வெளியே சாதாரண நோட்டரியாக வழக்கறிஞர் இவரிடம் வருபவர்கள் புகார்களை மட்டும் டைப் செய்து கொண்டு போவார்கள் அது தான் அன்றை வருமானம் இவரது வீட்டில் மகள் தவிர மனைவி மற்றும் மகன் மதிக்கப்படாதவராக உள்ளார். இவரின் சிபாரிசில் வழக்கறிஞர் உதவியாளராக நம்ரிதா சேர பல வழக்கறிஞகர்ளிடம் முயற்சிக்கிறார் யாரும் சேர்ந்து கொள்ள வில்லை முன் வரவில்லை எல்லோரும் நக்கலும் நையாண்டி கேலி பேசி அனுப்பி வைத்தனர்.
தன் மகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழக்கிறார் இந்த சம்பவம் யாரும் கண்டு கொல்லவில்லை இறந்தவரின் உறவுகள் வர வில்லை அமைதியாக போய் விட்டது.
தீக்குளித்து உயிரிழந்தார்க்கு நீதியை பெற்று தர வேண்டும் என்ற முடிவுக்கு வரும் சரவணன், அந்த சம்பவம் தொடர்பாக பொதுநலன் வழக்கு தொடர்கிறார்.இவருக்கு வழக்கறிஞர் உதவியாளராக நம்ரிதா சேர்ந்து கொள்கிறார் அதன்படி, தீக்குளித்து உயிரிழந்தவரின் மகள் கடத்தப்பட்டிருப்பதையும், அது பற்றிய புகாரை சம்மந்தப்பட்ட காவல் நிலையம் வாங்க மறுத்த தகவலையும் சரவணன் நீதிமன்றத்தில் தெரிவித்து, பொதுநலன் வழக்கை ஹேபியஸ் கார்பஸ் வழக்காக பதிவு செய்கிறார். சம்மந்தப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த சம்மந்தப்பட்ட நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிடுகிறார்கள். காவல்துறை கண்டுபிடிப்பதற்கு முன்பு அந்த பெண்ணை சரவணன் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார் இவருக்கு கிடைத்த தகவல் அந்த பெண் 20 வருடங்களுக்கு முன்பே காணாமல் போனதும், நீதிமன்றம் வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த நீண்ட நாட்கள் மனநலம் பாதிக்கப்பட்டு மனநல காப்பகத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. அப்படியானால் அவர் இப்போது மகள் கடத்தப்பட்டு விட்டார், என்று புகார் அளித்தது ஏன்? என்ற கேள்வியோடு அடுத்தடுத்த எப்பிசோட்கள் பல திருப்பங்களோடு பயணிக்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு வழக்கை கையில் எடுத்த சரவணன் ஜெயித்தாரா?, காணாமல் போன பெண்ணின் நிலை என்ன? என்பது மீதிக்கதை.
வழக்கறிஞராக நடித்திருக்கும் சரவணன், மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். கருப்பு கோட் போட்டு, நீதிமன்றத்தில் வழக்கு வாதங்கள் வசனம் பேசி அமைதியாக அனுபவம் மிக்க இயல்பான நடிப்பு அசத்தியிருக்கிறார் சுந்தரமூர்த்தி வழக்கறிஞராக கைதட்டல் பெறுகிறார் நடிகர் சரவணன்.
சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் நம்ரிதா, தைரியம், துணிவு மிக்க பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் பரபரப்பான திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன் நீதிமன்ற வளாகம், முழுக்க நீதிமன்றத்தில் நடக்கும் கதை என்பதால் பல்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி சிறப்பாக கொடுத்துள்ளார்
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் சரி யாக சிறப்பாக கொடுத்துள்ளார்
எடிட்டர் ராவணன். ஏழு எப்பிசோட்கள் தேவையான காட்சி மட்டும் இணைத்து விறு விறுபாக காட்சிகள் நகர்கிறது சிறப்பு .
இத்தொடரை இயக்கியிருக்கும் பாலாஜி செல்வராஜ், திரைப்படங்களின் திரைக்கதை வேகமாக இருக்கும், ஆனால் இணையத் தொடரின் திரைக்கதை பல திருப்பங்கள் படு வேமமாக 7 எப்பிசோட்களையும் சுவாரஸ்யமாகவே ரசிக்கும்படி கொடுத்துள்ளார் . வாழ்த்துக்கள் பாராட்டு.

