தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஷீலா, ஜாக்குலின் லிடியா,
விவேக் மோகன், ராம்போ விமல் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘கெவி’
கதைகரு
மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத மலை கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை வலியை சொல்லும் படம்.
படத்தை பார்ப்போம்
மலைகிராமம் தீடீர் ஒரு இரவில் நிலச்சரிவு சிக்கிய மக்களை காப்பாற்ற முடியாமல் ஐந்து உயிர் பலியாகிறது காரணம் அங்கு இருந்து கீழே மருத்துவ மனைக்கு வர சாலை வசதிகள் இல்லை குண்டும் குழியான ஒத்தையடி பாதை பல கிலோமீட்டர் நடந்து வரவேண்டும் இந்த நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது ஒட்டு கேட்க நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மலை கிராமத்திற்கு தொகுதிக்கு MLA..,போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கட்சிகார்கள் பெரும் பட்டாளமாக வருகிறார் . மலைகிராம ஊர் இளைஞர் கதாநாயகன ஆதவன் ஒட் டு கேட்க வந்தவர்களிடம் எங்கள் ஊருக்கு சாலை,வசதி மருத்துவமனை வசதி இப்படி எந்த வசதியும் செய்து தரவில்லை ஐந்து பேர் இறந்துட்டாங்க இது என்ன பதில் சொல்லபோறீங்க பல கேள்விகள் ஆதவன் கேட்க MLA உடன் வந்த ஆட்கள் மற்றும் போலீஸ் கோபம் கொண்டு மலைகிராம மக்களையும் ஆதவனையும் தாக்குகிறார்கள் . இரு கோஷ்டிகள் மோதி கொள்கிறார்கள் இந்த மோதலில் .போலீஸ் அதிகாரி மீது செருப்பு விழுகிறது பெரிய அவமானம ் கொஞ்ச நாள் கழித்தவுட ன் செருப்பு விழுந்து போலீஸ் அதிகாரி ஆதவனை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆதவன் மனைவி ஷீலாவை தனியாக விட்டு, டவுன் போய் காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்கிட்டு மலையில் இருந்து கீழே இறங்கும் போது, போலீஸ் அதிகாரியும்,வனத்துறை காவலர்களும் சேர்ந்து கொலை வெறி தாக்குதல் மரண அடி அடிக்கிறார்கள் கதாநாயகன் உடல் மீது பெட்ரோல் ஊற்ற இது ஒரு பக்கம் மறுபக்கம் அவரது மனைவிக்கு பிரசவ வலி துடிக்க , மருத்துவமனைக்கு கொண்டு சென்றதான் தாய் குழந்தை காப்பாற்ற முடியும் என்று ஊர் மருத்துவச்சி சொல்லிட்டாங்க மலைமேல் இருந்து கீழே வர பல கிலோமீட்டர் குழந்தை பிறந்ததா? ஷீலா நிலை என்ன?தாயும் சேயும் உயிர் பிழைததர்களா? இல்லையா?கதாநாயகன் உயிருடன் இருக்கிறார் இல்லையா? மலை கிராம மக்களுக்கு சாலை, மருத்துவ வசதிகள் கிடைத்தா? படத்தின் மீதிக்கதை. ..
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆதவன், மலையன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். வனத்துறை காவலர்களிடம் சிக்கிக்கொண்டு மரண அடிவாங்கும் உயிருக்கு போராடும் காட்சி கண்கலங்க வைக்கிறது
நாயகி ஷிவா கணவன் மீது அன்பும் பாசமும் அதே நேரத்தில் நிறைமாத கர்பினியாக பிரசவ வலி வேதனை எதார்த்தமான நடிப்பை அள்ளி கொடுத்துள்ளார் பாராட்டு. .ஷீலா வின் தம்பியாக பிறக்கும் குழந்தைக்கு தாய் மாமன் நடிப்பு அசத்தியுள்ளார். மற்றும் MLA, போலீஸாக வனத்துறை காவலராக நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசை : பாலசுப்பிரமணியன் ஜி & சா.ராஜாரவிவர்மா சூப்பர்
ஒளிப்பதிவு : ஜெகன் ஜெயசூர்யா சிறப்பாக மலை கிராமத்தின் அழகை அள்ளி கொடுத்துள்ளார்
தயாரிப்பு : ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் பிலிம் கம்பெனி
இயக்கம் : தமிழ் தயாளன் சமுதாய அக்கறை மலை கிராம மக்களின் வாழ்க்கையின் வலி வேதனை உண்மை நம் கண் முன்னே நிறுத்தி விட்டார் இவரை பாராட்டு வோம் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் இப்படம் காதல் பாட்டு காமெடிகலாட்டா ,பெரிய அறுவாள் சண்டை காட்சி எதுவும் இல்லை..அனைவரும் பார்க்கலாம் பொறுமை காக்க வேண்டும்

