“தலைவன் தலைவி” திரைவிமர்சனம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன், சரவணன், தீபாசங்கர், காளி வெங்கட், மைனா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தலைவன் தலைவி.

கதைகரு வீட்டுகுள் ஈகோ பிரச்சினை பெண்களால் நீயா? நானா? ஆரம்பித்து  ஆண்கள் படும் அவஸ்தை  துல்லியமாக சொல்லபட்டுள்ளது

படத்தை பார்ப்போம்;

விஜயசேதுபதியின் குழந்தைக்கு மொட்டை போட குலதெய்வம் கோயிலுக்கு வந்துள்ளனர் அங்கு வந்த   விஜயசேதுபதி குழந்தையின் முடிய்யை வழித்த சலூண் கடைகார்  கன்னத்தில் பளார் அடி விழுந்தது அங்கு இருந்த மனைவி ,மாமனார் மாமியார் யிடம் வாக்குவாதம் வாய் தகராறு போய்கிட்டேயிருக்கு சாமி கும்பிட வந்தவர் ஊர்காரர் தூரத்து சொந்தம் காளி வெங்கட்  இவங்க பிரச்சினை  தீர்க்க வருகிறார் மற்றும் பல உறவு வந்தும் பிரச்சினை தீர்க்க முடியவில்லை பிளாஷ் பேக் ஆரம்பம்.. 

மதுரை ஒத்தக்கடையில் ஹோட்டல் நடத்திவரும் ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). நித்யா மேனனுக்கும் (பேரரசி) திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. இதன்பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி  காதலித்துக் கொண்டிருக்கும்போது, விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, அவருடைய தந்தை அனைவரும் ரவுடிகள் என தெரியவர, நித்யா மேனன் வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர்.ஆனால், தனது வீட்டை எதிர்த்து விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்கிறார் நித்யா மேனன். திருமணத்திற்கு பின் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்க இவர்கள் இருவருக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகளால் இருவீட்டாரும் குடும்ப பெண்கள் பிரச்சினை கொளுத்தி போட்டுகிட்ட  இருக்காங்க வீட்டு சண்டையாக ஆரம்பித்து உறவு, ஊர் சண்டையாக மாறி   உறவுகளுடன் அடிதடி ஒரே சத்தம் இடைவேளை  முடிந்ததும் அடங்கவில்லை காது ஜவ்வு கிழிற அளவுக்கு சத்தம் கடைசியில் நீதி மன்றம் வாசலில் காத்திருக்றார். ஆகாச வீரன் குடும்பம். அவர்கள் ஏன் பிரிந்தார்க இந்த பிரிந்தவரின் நிலை என்ன? அதன் பிறகு என்ன நடந்தது? குழந்தைக்கு மொட்டை போட்டார் களா? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை… 

கதாநாயகன் விஜய் சேதுபதி குடுபத்தலைவன் எப்படி வாழவேண்டும்  மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடிவிழும் அது போல  தன் குடும்பம் இன்னொரு பக்கம் மனைவி குடும்பம் இரண்டு குடும்பம் கொடுக்கும்  வலியும் வேதனையும்  தாங்க முடியாமல் ரோட்டில் ஓடும் லாரி முன் நிற்கிறது படுத்துகிட்டு நான் குடிகாரன் இல்ல குடுபஸ்த்தன் வண்டியை என் மேல ஏந்து கத்திகூச்சல் போடறதும்  இவருடைய நடிப்பு வேற லெவல்

நித்யா மேனன் நடிப்பு அசத்திய இருக்கிறார் நிஜ கணவன் மனைவி போல் நடிப்பில்  உண்மையாகவே ஒரு கணவன் மனைவிக்கு இடையே எப்படி சண்டை வந்தால் நடந்து கொள்வார்களா அதே போல் காதல் மோதல்  மனைவியாக வாழ்துள்ளனர் . 

மற்றும் இதில் நடித்திருக்கும் விஜயசேதுபதி அம்மாவாக தீபா சங்கர் தன் கதாபாத்திரம் சிறப்பாக நடித்துள்ளார்  .விஜயசேதுபதி அப்பாவாக  சரவணன் மற்றும்  , வினோத், ரோஷினி ஹரிப்ரியன், , மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ், வினோத் சாகர், ஒரு சில காட்சிகள் வந்த அருள்தாஸ், ஜானகி சுரேஷ், சலூண் கடிகாராக சென்றாயன் என அனைவரும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெறுகிறார்கள் தனது நகைச்சுவையின் மூலம் யோகிபாபு, எல்லோரையும் சிரிக்கவைக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது.

எம். சுகுமாரின் ஒளிப்பதிவு இரவு காட்சி ஓட்டலில் மற்றும் குலதெய்வம் கோயில் ஓளிபதிவு சிறப்பாக இருந்தது

இயக்குநர் பாண்டிராஜ் கல்யாணத்துக்கு முன் உள்ள காதல் அதன்பிறகு கணவன் மனைவி இடையே நடக்கும்  உறவுகளுக்கு இடையே நடக்கும் ஈகோ இவைகளை கதை களமாக எடுத்துக்கொண்டு அதை   திரைக்கதையமைத்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சண்டைக்கு விவாகரத்து முடிவு அல்ல, அதை தாண்டியும் உறவு உள்ளது என்பதை

திருமணம் ஆன குடும்பஸ்த்தர்கள் அவசியம்   பார்க்கும்  படமாக தலைவன் தலைவி படத்தை   கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.