அதானி வழங்கும் தி அமேசிங் இந்தியன்ஸ் விருதுகள் 2025-ல் சென்னையைச் சேர்ந்த டாக்டர். இசா பாத்திமா ஜாஸ்மின் கௌரவிக்கப்பட்டார்.
சென்னை, ஆகஸ்ட் 19, 2025: இந்தியாவின் முன்னணி ஆங்கில செய்தி சேனலான டைம்ஸ் நவ், அதானி வழங்கும் அமேசிங் இந்தியன்ஸ் விருதுகள் 2025-ஐ புது தில்லியில் நடத்தியது. இதில், தைரியம், உறுதிப்பாடு மற்றும் தன்னலமற்ற செயல்கள் மூலம், பலரின் வாழ்க்கையில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய 13 அசாத்திய நபர்களின் அசைக்க முடியாத முயற்சிகளை கொண்டாடியது.
உணவு மேலாண்மை மற்றும் ஊட்டச்சத்து பிரிவில், சென்னையைச் சேர்ந்த டாக்டர். இசா பாத்திமா ஜாஸ்மின், பசி மற்றும் உணவு கழிவுகளைச் சமாளிப்பதற்காக, கருணை உள்ளத்தோடு சரியான தீர்வு கண்ட அசாதாரண முயற்சிக்காக கௌரவிக்கப்பட்டார்.
பல் மருத்துவரான ஜாஸ்மின், தனது மருத்துவ வாழ்க்கைக்கு அப்பால், ஏழைகளின் பசியை போக்க, கண்ணியம் மற்றும் அமைதியான மாற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். 2017 ஆம் ஆண்டில், அவர் தி பப்ளிக் ஃபவுண்டேஷன் கீழ், ஐயமிட்டு உண் என்ற பெயரில் ஒரு சமூக குளிர்சாதன பெட்டி முயற்சியை நிறுவினார். ஒரு குளிர்சாதன பெட்டியிலிருந்து தொடங்கி, அது 20 லட்சத்துக்கும் அதிகமான உணவுகளை பரிமாறிய ஒரு இயக்கமாக மாறியுள்ளது. ஒரு சமூக சேவகராக அவரது பயணம், பசியை புள்ளிவிவரங்களாக பார்க்காமல் கதைகளாக பார்த்து, உதவி செய்வதை விட கவனிப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதியான, முறையான நடவடிக்கைகளுடன் பிரதிபலிப்பதில் வேரூன்றி உள்ளது.
…..
Chennai’s Dr. Issa Fathima Jasmine Honoured at Adani Presents The Amazing Indians Awards 2025
Chennai, August 11, 2025: Times Now, India’s leading English news channel, hosted the Amazing Indians Awards 2025 presented by Adani in New Delhi, celebrating the indomitable spirit of 13 exceptional individuals whose courage, determination, and selfless actions have inspired change and left a lasting impact on many lives.
In the Food Management and Nutrition category, Dr. Issa Fathima Jasmine from Chennai was honoured for her extraordinary efforts to tackle hunger and food waste with empathy-led solutions. A practicing orthodontist, Dr. Jasmine chose to dedicate her life beyond clinics to issues of hunger, dignity, and quiet change.
In 2017, she founded Ayyamittu Unn, a community fridge initiative under The Public Foundation. What began with one fridge has grown into a movement that has served over 20 lakh meals. Her journey as a social worker is rooted in lived compassion witnessing hunger not as statistics, but as stories and choosing to respond not with charity, but with care, consistency, and quiet, systemic action.
***
