JSM Movie Production மற்றும் Emperor Entertainment தயாரிப்பில் சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த்ரவி, சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் மாஸ்டர், ராஜ்குமார் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் இந்திரா.
கதை
வசந்த் ரவி போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். பணியின் போது மது அருந்தி போலீஸ் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துகிறார் இதனால் காவல் துறை அவரை பணி இடைநீக்கம் செய்கிறது.இதனால் விரக்தியில் மதுக்கு அடிமையாகி தொடர்ந்து குடித்து வந்ததால் கண் பார்வையை இழக்க நேரிடுகிறது ,கண் பார்வை இழந்ததால் மனைவி நாயகி மெஹ்ரின்.கண்ணுக்கு கண்ணாக பார்த்து வருகிறார் பின் விருப்ப ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
அதே சமயத்தில் சென்னையில் தொடர் கொலைகள் ஒரே மாதிரி நடக்கின்றன. சடலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஹீரோ-வின் மனைவி கயல்யும் கொலை செய்யப்படுகிறார்.
கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரியான கல்யாண் மாஸ்டர் தீவிரமாக தேடுகிறார் , கண்பார்வை இழந்த ஹீரோ வசந்த்ரவி நண்பருடன் சேர்ந்து கொலையாளியை
துண்டாக வெட்டி வீசி எறிந்து வருகிறார். இதே போல அடுத்தடுத்து சில கொலைகளை செய்து வருகிறார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்ட்ரான கல்யாண்
இதே வேளையில் மெஹ்ரின் கொலை செய்யப்படுகிறார். இதனையடுத்து கொலை செய்த கொலைகாரனை தேடி செல்லும் வசந்த் ரவியிடம் கொலையாளி மாட்டிக் கொள்கிறார்.போலீஸ் விசாரணை போது கொலைகள் நான் தான் செய்தேன் ஒப்புகொண்டான் ஆனால் வசந்த்ரவி மனைவியை மெஹ்ரினை நான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறார் சுனில்
இறுதியில் மெஹ்ரினை கொலை செய்தது யார்?
தீீீீீீவிரமாக கைது செய்கிறார். பின் அந்த சைக்கோ கொலையாளிடம் விசாரணை நடத்தும் போது, எதிர்பாராத திருப்பமாக எல்லா கொலையையும் நான்தான் செய்தேன் ஆனால் வசந்த்ரவி மனைவியை நான் கொலை செய்யவில்லை என சுனில் (கொலைகாரன்) சொல்ல அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள என்ன? வசந்த்ரவி மனைவியை கொன்ற கொலைகாரன் யார்? எதற்காக கொன்றான்? என்பதே படத்தின் சுவாராஸ்யமான கதை.
வசந்த்ரவி. கண் தெரியாதவராக போலிஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். அழகாலும், வசீகர சிரிப்பாலும் நடிப்பாலும் கவர்கிறார் கதாநாயகியான மெஹ்ரின் பிர்சாடா.
நடிகை அனிகா சுரேந்திரன் சில காட்சிகளில் வந்தாலும், தனது உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் சுமேஷ் மூரின் நடிப்பும் அருமை. சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் சுனில் சிறப்பாக நடித்துள்ளார். போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கல்யாண் மாஸ்டர் நடிப்பும் அருமை. மற்றும்
இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். பிரபு ராகவின் ஒளிப்பதிவு அருமை. அஜ்மல் தஹ்சீன் இசைஜபடத்திற்கு பெரிய பலம்.
சைக்கோ கொலை பற்றிய கதையை தனது திரைக்கதை மூவம் சுவாராஸ்யமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சபரீஷ் நந்தா. வாழ்த்துக்கள்.

