நடிப்பு ஹரிஷ் அலக் விஷ்ணு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா, காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால்த:யாரிப்பு: ஏ அழகு பாண்டியன் இசை: அஸ்வத்:,ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன்:இயக்கம்: சுபராக் முபாரக் ;மக்கள் தொடர்பு : ஆர் மணி மதன்
“நறுவி” கதைகளம் சஸ்பென்ஸ் திரில்லர் படம்.
படத்தை பார்ப்போம்;
ஹரிஷ் (தீரன்) நல்ல வசதியான அப்பா, அம்மாவுக்கு, பிறந்திருந்தாலும் மலைவாழ் மக்களுக்கு உதவி மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கொடுக்க வேண்டும் இதனால் விருப்பத்துடடன் பள்ளி ஆசிரியர் பணி இடம் மாற்றலாகி குன்னூர் மலை கிராமத்துக்கு வருகிறார் அங்கு இருக்கும் மலைவாழ் மக்களுடன் நல்ல நட்பாகவும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி அறிவு திறன் வளர்க்கவும் முயற்சி செய்து வருகிறார் இந்த நிலையில் திடீரென ஹீரோ ஹரிஸ் காணமல் போகிறார் எங்கு போனார் அவரை கண்டுபிடித்தார்கள..? இல்லை யா? உண்மையில் அங்கு ஆண்கள் மர்மமான முறையில் இறப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டு பிடித்தாரகளா இல்லையா.? என்பது தான் படத்தின் மீதி கதை..
இதில் ஹரிஸ் ஹீரோ தீரன் கதாபாத்திரத்தில் சமூக அக்கறையுடன் சிறப்பாக நடித்திருக்கிறார்
தேயிலைத் தோட்ட முதலாளியாக வரும் மதன் எஸ் ராஜா வில்லனாக மாறி இருக்கிறார்.
ஹீரோயின் பாடினி குமார் பயமுறுத்தும் சத்தத்தைக் கேட்டு ஷாக் ஆகும்போது நம்மையும் பயமுறுத்தி அசத்தலான நடிப்பு.கொடூத்துள்ளார் மற்றும் மாதவி என்ற கதாபாத்திரம் மீது கதை கருவாக பயணிக்கிறது மற்றும் .இவர்களுடன் நடித்த வின்சு, வி.ஜே.பப்பு, , ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ். ராஜா, .அனைவரும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
மலைக்கிராம பகுதியில் நடைபெற்றிருக்கும் படப்பிடிப்பு கதைக்கு உயிரோட்டம். ஒளிப்பதிவாளர் ஆனந்த் ராஜேந்திரனின் கேமரா அப்பகுதியின் இயற்கை பசுமை அழகை காட்சிகளை அள்ளி கொடுத்துள்ளார்
அஸ்வத்தின் பின்னணி இசை கை கொடுத்திருக்கிறது.
எடிட்டர் படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் சேர்ந்துள்ளார்.
இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பணி யை செய்துள்ளனர்
பெரிய பட நிறுவனம் தயாரிப்பாளர் எடுக்கும் படம் வெட்டு,குத்து , இரத்தம் தெறிக்க சமுதாயத்தை கெடுக்கும் படஙகளை தயாரிக்கிறார்கள்
ஏ.அழகுபாண்டியன் அவர்கள் சமூக அக்கறைக்கு ஒரு .படம் கொடுத்து உள்ளனர் அவருக்கு பாராட்டு
இயக்குனர்
அறிமுக இயக்குனர் சுபா ரக். எம் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது படத்தில் சொல்லப்பட்ட கதை நன்றாக இருக்கிறது. திரைக்கதை கவனம் செலுத்த வேண்டும் உங்கள் முயற்சி பாராட்டு