வி கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்திருத்திருக்கும் “படையாண்ட மாaவீரா*படத்தை இயக்கியிருக்கிறார் வ.கௌதமன்.
இதில் வ.கௌதமன், மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், பூஜிதா, சமுத்திரக்கனி, பாகுபலி பிரபாகர், மதுசூதனன் ராவ், ஆடுகளம் நரேன், இளவரசு,சாய்தீனா, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ரெடின் கிங்ஸ்லி, தமிழ் கௌதமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு-கோபி ஜெகதீஸ்வரன், இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசை – சாம்.சி.எஸ், வசனம்- பாலமுரளி வர்மா, இணை தயாரிப்பு-வ.கௌதமன், ஈ.குறளமுதன், யு.எம்.உமாதேவன், கே.பாஸ்கர், கே.பரமேஸ்வரி, தமிழக வெளியீடு-சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி.என்.அழகர், மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
கதை கரு
மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ-/ சமூக போராளி காடுவெட்டி குரு வாழ்க்கை
படத்தை பார்போம்;
காடுவெட்டி குருவாக கதையின் நாயகனாக பட இயக்குனர் வ.கௌதமன் இவர் ஊருக்கு நல்லது செய்து வருகிறார் சுற்று மாவட்ட த்தில் ஊர்மக்களின் காவல் தெய்வம் இருக்கிறார் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த ஒரு பெண்ணிடம் போலீஸ் அதிகாரி பாலியல் கொடுமை கொடுக்க, அதை தட்டி கேட்க வ.கௌதமன் சென்று, காவல் நிலையத்தை அடித்து துவம்சம் செய்து கிளம்பி ட்டார் . அதே காவல் நிலையத்தில் வருகைதரும் போலீஸ் அதிகாரி ராம்குமார் பதவி உயர்வு பெற்று வருகிறார் காவல் நிலையம் இப்படி அலகோலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார் காடுவெட்டி குரு என்பரைப் பற்றி போலீசாரிடமிருந்து தெரிந்து கொள்கிறார். பிளாஷ் பேக் ஆரம்ப காடுவெட்டிகுரு பள்ளிபருவ சிறு வயதில் உறவுகாரர் ஆடுகளம் நரேன் நம்பிக்கை துரோகத்தால் தன்னுடைய அப்பா சமுத்திரகனியை வெட்டி சாய்த்தனர் .தாய் சரண்யா கத்தி கதறி அழுகிறார் கணவனை இழந்த பெண் தாலி கழற்றிவிடுவது தான் வழக்கம் சரண்யா தாலி கழற்ற மறுக்கிறார் ஒரு சபதம் எடுக்கிறார் என்கணவரை கொன்றவன் தலையை வெட்டி எடுத்து சூலத்தின் சொறுகினால் தான் நான் பூ ,பொட்டு தாலியை எடுப்பேன் இதை அறிந்த சிறுவன் குரு(தமிழ்கௌதமன்)சிறுவன் பெரியவனாகி தந்தையை கொன்றவரை தலையை துண்டித்து தலையை கோயில் சூலத்தில் சொறுகி வைக்கிறான் தமிழ்கௌதமன் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்த பிறகு , அனைத்து சாதி மத பாகுபாடுயின்றி (இந்து, முஸ்லிம்,கிருத்துவர்) எல்லா சமூகத்தின் மக்களின் ஊர் மக்கள் பாதுகாவலரக தலைவராகவும் வாழ்ந்து வருகிறார் மக்களின் போராட்டத்தில் வெற்றி கண்டார் அவரது அசுர வளர்ச்சி பொறுத்து கொள்ள முடியாதவர் அரசியல் தலைவர்கள் அரசாங்க அதிகாரிகள், உயர் சாதியினர், அந்த மாவட்டத்தில் கனிம வளத்தை கொள்ளை அடிக்கும் தொழிலதிபர்கள் இவரை கொலைசெய்ய திட்டம் போடுகிறார்கள் இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிபடுகிறது காடுவெட்டி குரு உடல் நிலை சரியானதா , இல்லையா? ஊர் மக்களின் நிலை என்ன? அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றதா !!குருவை கொலை செய்ய திட்டம் போட காரணம் என்ன? என்பதே ‘படையாண்ட மாவீரா’ என்ற காடுவெட்டி குரு வாழ்க்கையின் மீதி கதை திரையில் காணலாம்.
நடிகர்கள்
காடுவெட்டி குருவாக கதையின் நாயகனாக களமிறங்கியிருக்கும் கௌதமன் படத்தில் உடை நடை வசன உச்சரிப்பு, நடனம், சண்டைக்காட்சிகள் என்று செய்து அசத்தியுள்ளார். கண்கள் சிவக்க, தீப்பொறி பறக்கும் பார்வை, பேசும் வசனங்கள் என்று ஒவ்வொரு காட்சியிலேயும் காடுவெட்டி குருவாக வாழ்ந்துள்ளார்.
காடுவெட்டி குருவின் தந்தையாக சமுத்திரக்கனி, தாயாக சரண்யா ஆகிய இருவரின் அனுபவ நடிப்பு கை கொடுத்துள்ளது.
மனைவி பூஜிதாவிற்கு காட்சிகள் குறைவு என்பதால் படத்தில் பாடல் காட்சிகளில் வந்து அசத்திபோகிறார்.
காடுவெட்டி குருவின் இளம் பருவ கதாபாத்திரத்தில் நடிக்கும் தமிழ் கௌதமன், கண்களில் பழி தீர்க்க வேகம் கோபம், வெறி தனமான சன்டை .காட்சிகள் தூள் கிளப்பி கிறார்
இப் படத்தில் நடித்த வில்லனாக ஆடுகளம் நரேன்,காடுவெட்டிகுரு குடும்ப த்திற்கு விஸ்வாசி மன்சூர் அலிகான்,ரெடின் கிங்ஸ்லி ,நல்ல போலீஸாக இளவரசு, மற்றும் மதுசுதனன் ராவ் இன்னும் பலர் சிறப்பாக .நடித்துள்ளனர்
வைரமுத்து பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் மற்றும் சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் செம சூப்பர் அசத்தியுள்ளது.
ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ்வரன் அனைத்து காட்சிகளுக்கும் அதிரடி சண்டை காட்சிகளில் தன் முழு திறமையை காட்டி சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.
எடிட்டர் ; ராஜா முகமதுவின் படதிற்க்கு தேவையான மட்டும் சேர்ந்துள்ள னர்
மக்களின் மனதில் வாழ்ந்த மாமனிதர், மக்களுக்காகவும், மண்ணிற்காகவும் பாடுபட்ட நேர்மையான மனிதராகவும் சமூக நல்லிணக்க பாடுபட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கை சரியான நேரத்தில் கொடுத்துள்ளீர் இயக்குனர் வ.கௌதமன் பாராட்டுகள்
படையாண்ட மாவீரா மக்களின் மனதை ஆண்ட மாவீரா