விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் . அருவி , வாழ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து அவரே இசையமைத்தும் இருக்கிறார்.ஒளிப்பதிவு : ஷெல்லி நடிகர் கள் வாகை சந்திரசேகர், மற்றும் காதல்ஓவியம் சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்திய சினிமாவில் பல அரசியல் பேசும் படங்கள் வந்துள்ளது சமீபத்தில் வந்த பொலிட்டிக்கல் த்ரில்லர் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது
கதாநாயகன் (கிட்டு) விஜய் ஆண்டனி தலைமைச் செயலகத்தில் அரசியல் தரகராக இருக்கிறார் இவரிடம் எந்த வேலை யாக இருந்தாலும் அதை கமிஷன் அடிப்படையில் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறார். யாருடைய பெயரும் வெளிவராமல் எந்த வேலையாக இருந்தாலும் போன் காலில் முடித்து கொடுக்கிறார் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதுடன், அதிகாரப் போட்டிகளுக்கும்துணை போகிறார். அதற்கான கமிஷன் எடுத்து கொள்வார் இன்னொரு வர் இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் இதே தொழிலை ஆளும் கட்சி ஆதரவுடன் பெரும் செல்வாக்குடன் செய்து கொண்டிருக்கும் வில்லன் சுனில் கிருபாளினி இவருக்கு தமிழகத்தில் இப்படி ஒரு ஆள் இருப்பது தெரியவருகிறது அவரிடம்…ரூ 6000 கோடி பணம் இருப்பதாகவும் அனைத்தையும் பிடுங்கி கொள்ள திட்டம் போடுகிறார்கள் அவரிடம் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்து Shiv வேலையை தொடர்ந்தாரா ? அல்லது அதிகார பிடியில் சிக்கினரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை
நாயகன் சிறப்பான தேர்வு விஜய் ஆண்டனி, அவர் வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார். .
ஹீரோயின் திரிப்தி ரவீந்திரா ஹோம்லியாக வருகிறார். ஆனால், படத்தில் அவருக்கான காட்சிகள் அவ்வளவாக இல்லை.
இந்திய அரசியல் புரோக்கர் வில்லனாக நடித்திருக்கும் சுனில் கிருபளானி, இன்றைய படித்த அரசியல் கிரிமினல் சரியான தேர்வு பொருத்தமாக இருந்தது
விஜய் ஆண்டனி ப்ளாஷ்பேக் காட்சி வாகை சந்திரசேகர் வருவது பெரியாரிசம் பற்றி பேசுவது போன்ற முற்போக்கு கருத்துக்கள் எல்லாம் சிந்திக்க வைக்கும் காட்சிகள்,மற்றும் இப்படத்தில் ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரமும், அதில் அவர்கள் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.
: ஷெல்லி ஒளிப்பதிவு. பின்னணி இசை; படத்திற்கு பெரிய பலம்
பல மாநில மற்றும் மத்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் ஆலோசகர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும், அரசியல் திருடர்கள் பற்றி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத முதல் பாதி.இரண்டாம் பாதி அடுத்த காட்சி எதிர்பார்ப்புடன் விறு விறுப்பாக துணிச்சலுடன் நேர்த்தியான திரை கதை அமைத்த இயக்குனர் அருண் பிரபு பாராட்டு வாழ்த்துக்கள்
மொத்ததில் இப் படம் அரசியல் விரும்பி ரசிகர்கள் விருந்து