பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் டி.ராஜேந்தர்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார் டி.ராஜேந்தர்!

கரூர் துயர சம்பவத்திலிருந்து இன்னும் மீளாத டி.ராஜேந்தர், (03.10.2025) நாளை தனது 69’வது பிறந்தநாளை கொண்டாடவில்லை!

டி.ராஜேந்தர் தனது “உயிருள்ளவரை உஷா” படத்தை விரைவில் ரீ ரிலீஸ் செய்யவுள்ள நிலையில், நாளை அவருடைய 69’வது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், கரூரில் ஏற்பட்ட துயர சம்பவத்தை முன்னிட்டு, நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டார்!

டி.ராஜேந்தரின் தம்பியும், சிம்பு ரசிகர் மன்ற தலைவருமான வாசு, சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபா சாலையில் உள்ள சிம்பு மற்றும் டி.ராஜேந்தர் அலுவலகத்தில் 500 பேருக்கு மதிய உணவு வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியிலும் டி.ராஜேந்தர் கலந்து கொள்ளவில்லை!