ஆண்டனி வர்கீஸ் அதிரடி மாஸ் லுக்கில் மிரட்டும் “காட்டாளன்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மாபெரும் ஆக்ஷன் திரில்லர் படமான “காட்டாளன்” படத்தின், அதிரடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகர் ஆண்டனி வர்கீஸுன் மிரட்டல் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. எரியும் கண்கள், சிதறிய சிவப்பு முடி, வாயில் புகைபிடிக்கும் சிகார் — இப்படியாக ஆண்டனியின் அதிரடி லுக், ஒரு கடும் ஆற்றல் கொண்ட மாஸ் அவதாரமாக காட்சி தருகிறது. ரத்தம் பூசப்பட்ட முகம், கைகள் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்ஷன் களத்தை வெளிப்படுத்தி, இதுவரை கண்டிராத மிரட்டலான நிறைந்த தோற்றத்தை ரசிகர்களுக்கு வழங்கி விருந்தளிக்கிறது.
பான்-இந்தியா ஹிட் ஆக்ஷன் திரில்லர் *“மார்கோ”*விற்கு பின், “காட்டாளன்” படம் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஷெரீப் முஹம்மது தயாரிக்கும் மற்றொரு மிகப்பெரும் முயற்சியாக அமைந்துள்ளது.
புதிய இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகும் “காட்டாளன்”, மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. பான்-இந்தியா பிரம்மாண்டம் என்ற கான்செப்டில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் தயாராகிறது. தாய்லாந்தில் நடந்த அதிரடி காட்சிகள் படப்பிடிப்பின் போது, யானை சம்பந்தமான காட்சியில் ஆண்டனி காயம் அடைந்தார். உலகப் புகழ் பெற்ற “Ong-Bak” படத்தொடரின் ஆக்ஷன் இயக்குநர் கேச்சா காம்பக்டீ மற்றும் அவரது நிபுணர் குழுவே இந்த ஆக்ஷன் காட்சிகளை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், “Ong-Bak” படத்தில் புகழ்பெற்ற யானை பொங் இதிலும் நடித்துள்ளது.
படத்திற்கான இசையை “காந்தாரா”, “மகாராஜா” போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்த B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுனில் (Pushpa, Jailer 2), கபீர் துகான் சிங் (Marco), ராப்பர் பேபி ஜீன், தெலுங்கு நடிகர் ராஜ் திரண்டாசு (Pushpa), பாலிவுட் நடிகர் பார்த்த் திவாரி (Kill movie fame) ஆகியோர் நடிக்கின்றனர். மலையாளத் திரையுலகிலிருந்து ஜகதீஷ், சித்திக், மற்றும் VLogger-பாடகி ஹனான் ஷா இணைந்துள்ளனர்.
திரைக்கதை ஜோபி வர்கீஸ், பால் ஜார்ஜ், மற்றும் ஜெரோ ஜேக்கப் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்; உரையாடலை உன்னி ஆர் எழுதியுள்ளார். படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.
தொழில்நுட்பக் குழு:
நிர்வாக தயாரிப்பாளர் – ஜுமான்ஷெரீஃப்
ஒளிப்பதிவு – ரெனாடிவ்
இசை – B. அஜனீஷ் லோக்நாத்
எடிட்டிங் – ஷமீர் முஹம்மது
ஸ்டண்ட் – கேச்சா காம்பக்டீ, ஆக்ஷன் சந்தோஷ்
புரடக்ஷன் டிசைன் – சுனில் தாஸ்
கிரியேட்டிவ் புரடியூசர் – தீபில் தேவ்
புரடக்ஷன் கண்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
ஆடியோகிராஃபி – ராஜகிருஷ்ணன் M.R.
சவுண்ட் டிசைன் – கிஷன், சப்தா ரெக்கார்ட்ஸ்
உடை வடிவமைப்பு – தன்யா பாலகிருஷ்ணன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
பாடல்கள் – சுஹைல் கோயா
ஸ்டில்ஸ் – அமல் C. சுதர்
நடன அமைப்பு – ஷரீஃப்
விஎஃப்எக்ஸ் – 3 டோர்ஸ்
பிஆர் & மார்க்கெட்டிங் – வைசாக் C.வடக்குவீடு, ஜினு அனில் குமார்
பிஆர்ஓ – சதீஷ் குமார் S2 Media, ஸ்ரீ வெங்கடேஷ் P
டிஜிட்டல் மார்க்கெட்டிங் – ஆகாஷ்
டைட்டில் டிசைன் – ஐடென்ட் லாப்ஸ்
பப்ளிசிட்டி டிசைன் – யெல்லோ டூத்
English Press Release
**Antony Varghese Pepe Ignites the Screen in a Fiery Mass Avatar; “Kattalan” First Look Out Now!**
The first look poster of the grand action thriller *Kattalan*, produced by **Shareef Muhammed* under the banner of **Cubes Entertainments**, is out now. The poster unveils the stunning transformation of **Antony Varghese Pepe* in the lead role, showcasing him in a never-seen-before rugged avatar. With flaming eyes, messy red hair, and a cigar burning between his lips, Anthony’s look radiates raw intensity and sets the tone for a thrilling mass entertainer. The blood-stained face and hands further highlight the film’s gritty action essence, portraying Antony in a fierce new light unlike anything seen before.
Following the pan-Indian blockbuster action thriller *Marco*, *Kaattalan* marks yet another massive production venture by **Cubes Entertainments** and **Shareef Muhammed**.
Directed by debutant *Paul George*, *Kaattalan* was launched with one of the grandest pooja ceremonies in Malayalam cinema. Conceptualized as a **pan-Indian spectacle**, the film is being mounted on a massive scale. Recently, during the filming of an action sequence in Thailand, the actor sustained an injury in a stunt involving an elephant. The high-voltage action sequences in Thailand are choreographed by **Kecha Khamphakdee**, the world-renowned action director behind the *Ong-Bak* series, along with his expert team. Interestingly, *Kaattalan* also features *Pong*, the elephant that gained fame through the *Ong-Bak* films.
The film’s music is composed by **B. Ajaneesh Loknath**, the celebrated Kannada music director who rose to fame with South Indian blockbusters *Kantara* and *Maharaja*. *Kaattalan* features an ensemble star cast including **Telugu actor Sunil** (Pushpa, Jailer 2 fame), **Kabir Duhan Singh** (who impressed in Marco*), **rapper Baby Jean**, **Telugu actor Raj Thirandasu**(Pushpa Fame), **Bollywood actor Parth Tiwari**(Kill movie fame), and from Malayalam cinema — **Jagadish**, **Siddique**, and **vlogger-singer Hanan Shah**.
h