Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, லாவண்யா, பார்வதி, ஜீவா ரவி நடிப்பில்,
பவன் எழுதி இயக்க, அக்டோபர் 10 முதல் Zee 5 ஓ டி டி யில் காணக் கிடைக்கும் தொடர் ‘வேடுவன்’ .
” வேடுவன் “இணை தொடர் ஒரு என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரியின் கதை .
சூரஜ் ( கண்ணா ரவி), தமிழ் திரையுலகில் பிரபலமான ஹீரோ. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அவருக்கு, ஒரு சூப்பர் ஹிட் படத்தினை கொடுக்க வேண்டும் இந்நிலையில், இயக்குநர் ஒருவர், என்கவுன்டர் இந்நிலையில் உண்மை சம்பவம் ஒன்றை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஒருவர் அவரிடம் சந்தித்து கதை சொல்கிறார். கதைப்படி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி வேடத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது நல்ல கதை, தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் .மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் நடிக்க தொடங்குகிறார் கண்ணா ரவி.
முன்னாள் ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர் செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது.
அதே சமயம், சஞ்சீவ் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது திருந்தி ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக வாழ்த்துவருவதையும் கண்ணா ரவி அறிந்துக் கொள்கிறார் என்ன யிருந்தாலும் சஞ்சீவி முன்னாள் ரவுடியாக பல கொலைகள் செய்து யிருக்கிறான் நமக்கு மேல் அதிகாரி கொடுத்து வேலையை சஞ்சீவி என்கவுண்டர் செய்து முடிக்கிறார் . என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொள்கிறார்
துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடிப்பதற்கு மறுக்கிறார் கண்ணா ரவி. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டான இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை , அவரது இறப்பில் வேறு ஏதோ மர்மம் இருக்கிறது என்று நினைக்கும் கண்ணா ரவி படபிடிப்பு தளத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு உண்மையை கண்டறிய புறப்படுகிறார் நடந்தது என்ன அவருக்கு தெரியவரும் உண்மை அதிர்ச்சி அளிக்கிறது.
என்கவுண்டர் இன்ஸ்பெக்டர் மரணத்தின் இருக்கும் மர்மம் என்ன?
உண்மை சம்பவம் கதையா ? கற்பனை கதையா ? என்பதுதான் வேடுவன் படத்தில் கதை.
என்கவுண்டர் இன்ஸ்பெக்டர் வேடத்திற்கு கண்ணா ரவி தனது துடிப்பான நடிப்பால் வலு சேர்த்து இருக்கிறார்.
கதாநாயகனுக்கு இணையான பலமான கதாபாத்திரத்தில் சஞ்சீவ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆழமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்.
கண்ணா ரவியின் மனைவியாக வரும் லாவண்யா மற்றும் முன்னாள் காதலி வேடத்தில் வரும் வின்ஷா தேவி இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
விபின் பாஸ்கரின் பின்னணி இசை தொடருக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
சீனிவாசன் தேவராஜன் ஒளிப்பதிவு, சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் இயற்கையாக அமைந்திருக்கிறது.
என்கவுண்டர் இன்ஸ்பெக்டர் தற்கொலையில் இருக்கும் மர்ம முடித்து அவிழும் காட்சி சற்றும் எதிர்பாராதது.
பவன் குமார் இயக்கத்தில் துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும், அடுத்தது என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலான சஸ்பென்ஸ் திரில்லர்”வேடுவன் ” வெப் தொடரை சுவாராஸ்யமாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கும் இயக்குநர் பவன் குமாருக்கு பாராட்டு வாழ்த்துக்கள்

