என் நீண்ட நாள் நண்பரும், இயக்குனருமான வீ.சேகர், குடும்பப் பாங்கான படங்களை எடுத்து, தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர்.
விரலுக்கு ஏத்த வீக்கம், காலம் மாறிப்போச்சு, வரவு எட்டணா செலவு பத்தணா, பார்வதி என்னை பாரடி, பொங்கலோ பொங்கல் என்று பல படங்களை எடுத்தவர், இன்று நம் கண்களை எல்லாம் கண்ணீரிலே பொங்க வைத்துவிட்டு, கண்களை மூடிவிட்டார் என்ற செய்தி, என் மனதை வாட்டுகின்றது.
அவரை இழந்து வாடும் திரை உலகத்தினருக்கும், அவர் இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்…
இப்படிக்கு,
தமிழ் திரைப்பட இயக்குனர்
நடிகர்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்
விநியோகஸ்தர் மற்றும்
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்
@GovindarajPro

