நடிகர்கள் :- மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
தயாரிப்பு நிறுவனம்: ஃபிலிம் ஃபேக்டரி இயக்கம் : சிக்கல் ராஜேஷ், இசை : ஏ.எம் அசார், ஒளிப்பதிவு : பாஸ்கர், படத்தொகுப்பு : ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி : சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா, நடனம் : எல்.கே ஆண்டனி, பாடல்கள் : அரவிந்த் அக்ரம் ,மக்கள் தொடர்பு : ஏ.ஜான்
யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ வெளி யிடுபவர் சிலர், தங்கள் வருமானத்திற்காகவும், தங்களின் தளங்களின் பிரபலத்திற்காகவும், அத்துமீறிய மீறிய செயல்களை செய்கிறார்கள். இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் அடர்ந்த காட்டில், அவர்களை பட்டியலிட்டு கொலை செய்கிறான். இந்த கொலைகார சைக்கோவிடம் ஹீரோ மகேந்திரா, ஹீரோயின் நீமாரே இருவரும் சிக்கி கொள்கிறார்கள். சைக்கோ கொலையாளியிடம் இருந்து இருவரும் தப்பித்தார்களா, இல்லையா ? . அவர் யார் ? கொலை செய்ய காரணம் என்ன? எதற்காக இப்படி செய்கிறார் ? என்பதை பரபரப்பாக சொல்வதே ‘இரவின் விழிகள்’.
கதையின் நாயகனாக மஹேந்திரன், அறிமுக நடிகர் என்றாலும் அதற்கான அடையாளங்கள் தெரியாதபடி இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நீமா ரேய் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.
கருப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் சிக்கல் ராஜேஷ், திரைக்கதைக்கு மற்றும் அவரது நடிப்பு பெரும் பலம்
நிழல்கள் ரவி, சிசர் மனோகர், சேரன் ராஜ் ஆகியோர் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பு கொடுத்துள்ளார்
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். “அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் குஷிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. பின்னணி இசையிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பகல்காட்சிகளை பளிச்சென்று படமாகி . இரவு நேர காட்சிகளில் தொழில்நுட்ப சில யுத்திகளை பயன்படுத்தியிருப்பது தெரிகிறது அதையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எடிட்டர் ஆர்.ராமர், பட திற்கு தேவையான காட்சிகளை மட்டும் சேர்ந்து விறுவிறுப்பாகவும், வேகமாகவும் படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சிக்கல் ராஜேஷ்,இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சமூக வலைதளங்களில் தனக்கு வருமானம் அதிகரிக்கும் சேனல் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களின் வலியையும், வேதனையும் ரசிக்கும் கொடூரகாரன் செயல்பாடுகளை சுட்டிக் காட்டி யிருப்பது , அவர்களுக்கு அதிரடியான ஆக்ஷன் முறையில் பதில் கூற முயற்சித்திருக்கிறார்.
இப்படம் பார்க்கப்பட வேண்டிய படம்.

