Actor Vishal In “Irumbu Thirai” & Sandakozhi 2 Movie News
சண்டைகோழி-2 படபிடிப்பில் இருந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் திருப்போரூர் பகுதியை சேர்ந்த மகாதேவி என்பவர் BSC 3ஆம் ஆண்டு படிப்பு தொடர்வதற்கு மிகவும் சிரமத்தில் இருப்பதை அறிந்த புரட்சி தளபதி விஷால் அவர்கள் மகாதேவி அவர்களுடைய படிப்பை முடிப்பதற்கு ₹14.000.00 உதவி தொகை வழங்கினார், அதேபோன்று நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரின் மகனுடைய கல்விக்கு ₹18.000.00 தனது தேவி அறகட்டளை மூலம் உதவி செய்தார்
பொருட்படுத்தாமல் விஷாலின் இரும்பு த்திரை படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது விஷால் ஒரே நேரத்தில் துப்பறிவாளன் மற்றும் இரும்பு
த்திரை ஆகிய படங்களில் நடித்து வந்தார். துப்பறிவாளன் சென்ற வருடமும் , இரும்புதிரை இந்த வருட பொங்கலுக்கும் வெளியாகவேண்டிய திரைப்படங்கள். விஷால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க வேலையில் பரபரப்பாக இருந்ததால் சரியான நேரத்தில் இரண்டு படங்களையும் வெளியிட முடியவில்லை. இதனால் விஷாலுக்கு நஷ்டம் தான். ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் இந்த வருடம் துப்பறிவாளன் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சண்டகோழி-2வின் முதல் கட்ட படபிடிப்பு நிறைவடைந்து. தற்போது இரும்புத்திரை படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு அக்டோபர் 29 தேதி ஆரம்பித்து கன மழையையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரிச்சி ஸ்ட்ரீட் மற்றும் மவுண்ட் ரோட் பகுதிகளில் வைத்து நடைபெற்று வருகிறது. இரும்பு திரையை பொங்கலுக்கு (2018) வெளியிட வேண்டும் என்பதால் படத்தின் படபிடிப்பு இந்த மாத இறுதி வரை தொடர்ந்து இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெற்றுவருகிறது .
விஷால் நடிப்பில் , இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் இரும்பு திரை படத்தில் சமந்தா , ஆக்சன் கிங் அர்ஜுன் , ரோபோ ஷங்கர் , வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் c வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விஷால் இப்படத்தை தயாரிக்கிறார்.