மார்கன் திரை விமர்சனம்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் மார்கன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் லியோ ஜான் பால்.
இதில் விஜய் ஆண்டனி – துருவ் கோரக், அஜய் தீஷன் – தமிழறிவு, மகாநதி சங்கர் – காளி, சமுத்திரக்கனி – மூத்த ஏடிஜிபி ராஜா, தமிழ்நாடு சென்னை, ராமச்சந்திரன் – முருகவேல், பிரிகிடா – இன்ஸ்பெக்டர் ஸ்ருதி, தீப்ஷிகா – ரம்யா, அர்ச்சனா – அகிலா, கனிமொழி – வெண்ணிலா, வினோத் சாகர் – உதவி ஆணையர், நடராஜ் – மூத்த நரம்பியல் நிபுணர், அருண் ராகவ் – ஐவு ர்சு, கதிர் – தரகர் முகவர், ராஜாராம் – ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் கார்த்திக், அபிஷேக் – இயக்குனர் ராஜேஷ், நிஹாரிகா – ரம்யா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை: விஜய் ஆண்டனி, நpர்வாகி: தயாரிப்பாளர் நவீன் குமார், ஒளிப்பதிவாளர்: எஸ்.யுவா, படத்தொகுப்பாளர்;: லியோ ஜான் பால், கலை இயக்குனர்: ஏ.ராஜா, திரைக்கதை: விஷ்ணு, லியோ ஜான் பால், நடனம்: பிரபு, இணை இயக்குனர்: பிரபு குப்புசாமி, இணை இயக்குநர்கள்: பிரேம்குமார்.கே.ஏ., ஜெய்சன், ஸ்வேதா செல்வராஜ், சந்துரு, பிரவீன் குமார்.டி., உதவி இயக்குனர்கள்: அருண் பிரசாத்.ஆர், அஸ்விகா குமரவேல், தயாரிப்பு மேலாளர்: கிருஷ்ணபிரபு, வண்ணம்: கௌஷிக் கே.எஸ்,ஆடை ஒப்பனையாளர்: ஷிமோனா ஸ்டாலின், போஸ்ட் புரொடக்ஷன்: திவாகர் டென்னிஸ், ஹரிஷ்.ஒய், ஒலி பொறியாளர்: எஸ் சந்திரசேகர், விஎஃப்எக்ஸ் கலைஞர்கள்: ஆதித் மாறன், காட்வின், சனத், சதீஷ், அருண், சிவா,டிஐ: ப்ரோமோவொர்க்ஸ்,மாஸ்டரிங்: ஆதித்யா,கதை குழு: லியோ ஜான் பால, விஷ்ணு, கே.பழனி, பி.பரத் குமார், விளம்பரங்கள்: பீட்ரூட்,மக்கள் தொடர்பு: ரேகா
படத்தை பார்ப்போம்;
காதலியின் பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடி விட்டு காதலியை இரவு நேரத்தில் அவர் வீட்டு அருகே விட்டுவிட்டு புறப்படுகிறார். காதலி வீட்டுக்கு சென்றுகொணடிருக்கும்போது மர்மமான மனிதன் பாலோ செய்து அந்த பெண்ணை இன்ஜக்ஷன் போட்டுகொன்று குப்பைதோட்டியில்போட்டுவிட்டு சென்றுவிடுகிறான். இறந்த பெண் சடலம் நிறம் கருப்பாக மாறிவி டுகிறது வழக்கம் போல் துப்புரவு தொழிலாளி குப்பை தொட்டியில் குப்பை கொட்டும் போது பெண் சடலத்தை பார்த்து சக தொழிலாளி அதிர்ச்சி ஆனார்கள் அந்த தகவல் போலீஸ்க்கு போகிறது சம்பவ இடத்திற்கு போலீஸ் வந்து பார்த்துவிட்டு கொலைகாரன் யார் என்ற விசாரனையை தொடங்குகின்றனர். இந்த செய்தியை பாம்பேயில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு பத்திரிக்கை மூலம் தெரியவர தன் மகளுக்கு விஷ ஊசி போட்டு கருப்பாக்கி கொலை செய்ததுபோல் இந்த கொலையும் நடந்துள்ளது என உணர்ந்து விஜய் ஆண்டனி இந்த வழக்கை விசாரிக்க சென்னை வர, அங்கு தமிழறிவு என்ற ஒரு இளைஞனை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்கிறார். அவரும் விஜய் ஆண்டனி சந்தேகப்பட்டு விசாரிக்கிறார் அவன் நான் இந்த கொலையை செய்யவில்லை எனக்கும் அதற்கு ம் எந்த சம்பந்தமும் இல்லை ஒரே பதிலை மட்டும் தான் கூறுகிறான் .தன் வாழ்க்கையை பற்றி போலீஸிடம் எங்களுக்கு அப்பா, அம்மா இல்லை தன்னுடைய பாசமுள்ள தங்கை நாங்கள் இருவரும் மட்டும் என்னை தங்கை தேடுவாள் போலீஸ் இவன் சொல்வதை நம்பி அவனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள் நாங்கள் கூப்பிடும் போது ஸ்டேஷனுக்கு வரனும் என்று போலீஸ் எச்சரித்து அனுப்பி விடுகிறது. இந்த விசாரணை நடக்கும் போதே அதே பாணியில் இன்னொரு பெண் மருத்துவரை கொலை செய்து ரோடு ஒரத்தில் ஒதுக்கு புறத்தில் குப்பைகொட்டி இருக்கும் இடத்தில் சடலம் கிடைக்கிறது போலீஸ்க்கு பெரும் சவாலாக இருக்கிறது. தமிழறிவு எதை பார்த்தாலும் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்ளும் திறமை ஆற்றல் இருக்க, பிறகு தமிழறிவு உதவியுடன் அந்த கொலைக்காரனை கண்டு பிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. .விஜய் ஆண்டனி சைக்கோ கொலைகாரன் கண்டுப்பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை…
படம் முழுவதும் கொலை கேஸை கண்டுப்பிடிக்கும் காவல் துறை அதிகாரியாக வழக்கம் போல் இல்லாமல் இப்படத்தில் புது விதமாக மேக்கப் ஒரு பக்கம் உடல் நிறம் கருப்பாக பட முழுவதும் வருகிறார் விஜய் ஆண்டனிசி றப்பாக நடித்துள்ளார்
அறிமுகம் நடிகர் தமிழறிவாக வரும் அஜய், விஜய் ஆண்டனிக்கு நிகரான கதாபாத்திரம், அதை சிறப்பாக செய்துள்ளார்.சமுத்திரக்கனி, பிரிஜிதா, தீப்ஷிகா, மகாநதி ஷங்கர், வினோத் சாகர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியில் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அருமை. யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்க்கு பெரிய பலம்.
தொடர் கொலைகள், யார் செய்திருப்பார்கள்? என பல சுவார்ஸ்யத்துடன் அடுத்த காட்சி என்னா என்று யாரும் யூகிக்க முடியவில்லை விறு விறுவிறுப்பாக கதை நகர்கிறது எல்லோரும் ரசிக்குமபடி சொல்லியுள்ளார் இயக்குநர் லியோ ஜான்பால். பாராட்டுக்கள் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது.
மொத்தத்தில் மார்கன் திரில்லர் ரசிகர்களுக்கு நல்ல விருந்து

