“ரைட்” திரைவிமர்சனம்.

ரைட் திரைவிமர்சனம்

திருமால் லக்ஷ்மணன், T சியாமாலா தயாரிப்பில்

சுப்ரமணியம் ரமேஷ்குமார் இயக்கத்தில் நட்டி, அருண்பாண்டியன் விநோதினி, மூணார் ரமேஷ், அக்ஷரா, ஆதித்யா, யுவினா மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ரைட்.

கதை

அருண்பாண்டியன் தன் மகனை காணவில்லை என்று மகனின் நண்பர்களிடம் எங்கே என்று விசாரிக்கிறார். நண்பர்களிடம் சரியான பதில் கிடைக்காததால் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கிறார். அவரது புகாரை கண்டுகொள்ளவில்லை. அதனால் போலிஸிடம் முதல்வரை பார்ப்பேன் உயர் அதிகாரிகளை பார்ப்பேன் என்று சொல்கிறார். உயர் அதிகாரிகளும் சரியான ரெஸ்பான்ஸ் தராததால் மீண்டும் காவல்நிலையம் வருகிறார். அப்போது காவல் நிலையத்தை பாம் வைத்து மர்ம நபர் அவர் கன்ட்ரோலில் வைத்துக்கொண்டு சில விஷயங்களை போலிஸை செய்ய சொல்கிறார். அது என்ன? போலிஸ் அவரது நிபந்தனையை செய்தார்களா? அந்த மர்ம நபர் யார்? என்று கண்டுபிடித்தார்களா? என்பதை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியிருப்பதே படத்தின் மீதிக்கதை.

அருண்பாண்டியன் கொடுத்த கதாபாத்தரத்தை சிறப்பாக செய்துள்ளார். நட்டி போலிஸ் அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார். மூணார் ரமேஷ் நன்றாக நடித்துள்ளார். தங்கதுரை காமெடி ரசிக்கும்படி இருந்தது. வில்லனாக ரோஷன் நன்றாக நடித்துள்ளார். நீதிபதியாக விநோதினி வைத்யநாதன், ஆதித்யா ஷிவகுமார், யுவினா அக்ஷரா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

M. பத்மேஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். குணா பாலசுப்ரமணியம் இசை படத்தோடு ஓன்றிட செய்கிறது. தாமுவின் போலிஸ் ஸ்டேஷன் செட் அற்புதம். AC கர்ணாமூர்த்தியின் வசனம் அருமை.

இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் கிரைம் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லி வெற்றிபடமாக கொடுத்துள்ளார். வாழ்த்துக்கள்.

அதியன் ஆதிரை இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, சபீர் கல்லரக்கல், வின்சு சாம், பால சரவணன், முத்துக்குமார், அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தண்டகாரண்டம்.

கதை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுவரப்பட்ட என்ற கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த அண்ணன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், தாய், தந்தை என்று கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள்;. கலையரசன் பையூர் வனச்சாரகத துறையில் தற்காலிகமாக 7 வருடமாக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது தன் காதலி வின்சு சாமுடன் பழகி வருகிறார். வனத்துறையில் நிரந்தர பணி கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் உழைத்து, வந்த கலையரசனுக்கு அண்ணன் தினேஷால் வனத்துறையில் உயர் அதிகாரி அருள்தாஸ், உதவியுடன் பணபலமும், அரசியல் செல்வாக்கு மிக்க முத்துக்குமார் வனத்துறையில் நடத்தும் கஞ்சா கடத்தலை வெளிப்படுத்தியதால் தற்காலிக வனக்காவலர் பணி பறிபோகிறது. இந்நிலையில், கலையரசன், ராணுவத்தில் சேரலாம் என்று ஒருவர் கூறுகிறார். தம்பிக்கு ராணுவத்தில் பணி கிடைக்க வேண்டும் என அண்ணன் தினேஷ் பாடுபடுகிறார். ராணுவத்தில் பின்கதவு வழியாக சேருவதற்காக இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க, விவசாய நிலத்தை விற்று ஐந்து லட்சம் பணத்தை இந்த நபரிடம் கொடுக்கிறார். கலையரசன், ஜார்கண்ட் மாநிலம் ஜோத்பூர் சென்று ஐஎஸ்ஜிஎஸ் போலீஸ் பயிற்சி மையத்தில் சேர்கிறார். அங்கு அவரை போல பால சரவணனும் மற்றும் பல இளைஞர்களும் இந்த ஐஎஸ்ஜிஎஸ் போலீஸ் பயிற்சி மையத்தில் சேர்கிறார்கள். அங்கே உயர் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு இவர்களிடம், ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு சரணடைந்த நச்சல் என்று யார் ஒப்புக் கொள்கிறார்கள் அவர்களுக்கு மறுவாழ்வு, ராணுவப் பயிற்சி, வேலைவாய்ப்பு என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள். மேலும் அவர்கள் மட்டும் தான் மேலே பயிற்சிக்குச் செல்லலாம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போது வேறு வழியில்லாமல் அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டு, சரணடைந்த நக்சல்கள் என்று உள்நுழைகிறார்கள்
சரணடைந்த நக்சல் பாரிகள் பற்றிய செய்தி பத்திரிகையில் வருகிறது. இதைத் தெரிந்து கொண்ட உள்ளூர் போலீஸ்காரர்கள் கலையரசன் குடும்பத்தினரை சித்திரவதை செய்கிறார்கள். வனத்துறை அதிகாரி அருள்தாஸ், மற்றும் முத்துக்குமார் தினேசை பழிவாங்க அவரை கடத்திசென்று துன்புறுத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து தப்பித்து காட்டில் மறைந்து கொண்டு அவர்களை பழிவாங்குகிறார் தினேஷ். ஐஎஸ்ஜிஎஸ் போலீஸ் பயிற்சி மையத்தில் அதிகாரி யுவன் மயில்சாமி கீழ், கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வரும் கலையரசன், வட மாநிலத்தை சேர்ந்த சக தோழன் ஷபீர் கல்லரக்கல் மூலம் பலவித கஷ்டங்களை அனுபவித்தாலும், ராணுவ உடை அணிந்த வேலையோடு தான் ஊர் திரும்ப வேண்டும் என்ற மனநிலையில் அங்கே கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கலையரசனும், ஷபீர் கல்லரக்கல் ஒரு கட்டத்தில் உயிர் நண்பர்களாக மாறுகிறார்கள். இந்நிலையில் மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால், வெளியே நக்சல் பாரிகளால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க சரணடைந்தவர்களை ராணுவ அதிகாரிகள் போலி என்கவுண்டர் செய்து பலிகொடுக்கத் திட்டமிடுகிறார்கள். அதன்படி ஒரு குழுவுக்கு பணி கிடைத்து விட்டது என்று பொய்யான தகவல் கூறி அவர்களை அனுப்புகிறது. இந்தக் குழுவில் ஷபீர் கல்லரக்கல் இடம்பெற்றுள்ளார். வழியில் அவர்கள் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். இந்த செய்தியை பத்திரிகையில் காணும் கலையரசன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு எங்கும் செல்ல முடியாது, என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். அவர்கள் பிடியில் இருந்து எப்படியாவது எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் ஏன்று கலையரசன் முயற்சி செய்கிறார். அடுத்த போலி என்கவுண்டரில் தேர்வாகும் கலையரசன் நிலைமை என்ன? ஊரில் காட்டில் மறைந்து வாழும் அண்ணன் தினேஷ் நிலைமை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

முருகன் கதாபாத்திரத்தில் கலையரசன் சிறப்பாக நடித்துள்ளார்.
சடையனாக வரும் தினேஷ் அநியாயங்களை எதிர்த்து தட்டிக் கேட்டு, குரல் கொடுக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
தினேஷ் மனைவியாக ரித்விகா, கலலயரசன் காதலியாக வின்சுசாம் சிறப்பாக நடித்துள்ளனர்.
சபீர் கல்லரக்கல், பால சரவணன், முத்துக்குமார், அருள்தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
பிரதீப் கலைராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும், படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குநர் அதியன் ஆதிரை நக்சலைட் மோசடி பற்றிய உண்மையான கதையை , தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய கதையை உணர்வுப்பூர்வமாக எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார். பாராட்டுக்கள்.