ET Now-இன் இரு புதிய நிகழ்ச்சிகள்.. South Central and The Interview with Ayesha Faridi அறிமுகம்
சென்னை, 7 அக்டோபர் 2025: இந்தியாவின் முன்னணி வணிக செய்தி சேனலான ET NOW, நேயர்களுக்காக புதிதாக South Central மற்றும் The Interview with Ayesha Faridi ஆகிய இரு நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இது ET NOW-ற்கு மேலும் வலு சேர்க்கும். இதில் South Central நிகழ்ச்சியானது தென் இந்தியாவின் வலிமையான கலாச்சார பொருளாதார தாக்கத்தை வெளிக்காட்டவுள்ளது. “The Interview with Ayesha Faridi” நிகழ்ச்சியானது இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த நபர்களின் இயல்பான உரையாடல்களை ஒளிபரப்பவுள்ளது.
இதில் சவுத் சென்ட்ரல் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை முதல் வார நாட்களில் மாலை 5:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஒளிபரப்பாகும். தென்னிந்தியாவின் நாடித்துடிப்பை பிரதிபலிக்கும் விதமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் பொருளாதார இயந்திரம் மற்றும் கலாச்சார சக்தியாக இந்தப் பிராந்தியத்தின் பங்கை எடுத்துக்காட்டும். அத்துடன் இந்தியாவின் எதிர்காலத்திற்கு அது ஏன் முக்கியமானது என்பதை விளக்கும். வணிகம் தளம் முதல் அதிகார மையங்கள் வரை மற்றும் சினிமா முதல் உணவு வகைகள் வரை, இந்த சவுத் சென்ட்ரல் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஐந்து தென் மாநிலங்களின் விரிவான படத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். நிகழ்ச்சியின் அடிப்படை அம்சங்கள் வணிகம் & பொருளாதாரம், அரசியல் & கொள்கை, சினிமா & கலாச்சாரம் மற்றும் உணவு & வாழ்க்கை முறை ஆகியை இருக்கும் உள்ளடக்கியதாக இருக்கும்.
ET NOW மற்றும் ET NOW Swadesh இன் நிர்வாக ஆசிரியரான Ayesha Faridi உடனான நேர்காணல், வெள்ளிக்கிழமை, அக்டோபர் 3, 2025 அன்று பிற்பகல் 3:30 மணிக்கு திரையிடப்படும். இந்த முதன்மை வாராந்திர நிகழ்ச்சியில் வணிகம், சந்தைகள், கொள்கை, விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தைச் சேர்ந்த முன்னணித் தலைவர்களுடன் 25 நிமிடம் நேர்மையான, ஆழமான உரையாடல்கள் இடம்பெறும். இது இந்தியாவின் டிசிஷன் மேக்கர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுடன் ஒத்திருக்கும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமான ஆழமான பார்வைகளை வழங்கும். தினசரி தலைப்புச் செய்திகளின் சத்தத்திற்கு அப்பால் சொல்லப்படாத கதைகள், துணிச்சலான முடிவுகளுக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவு மற்றும் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க குரல்களிடமிருந்து எதிர்கால உத்திகள் பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நிகழ்ச்சிகளின் அறிமுகம் குறித்து Times Network கூறுகையில், ‘South Central’ and ‘The Interview with Ayesha Faridi’, நிகழ்ச்சிகள் மூலம் ET NOW வெறும் தலைப்பு செய்திகளைத் தாண்டி ஆழமான நிகழ்ச்சிகளை தர வேண்டும் என்ற தனது நோக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த இரு நிகழ்ச்சிகளும் கூர்மையான பகுப்பாய்வை ஈர்க்கும் கதைகளுடன் இந்தியாவின் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தை வடிவமைக்கும் மக்கள் மற்றும் சக்திகள் குறித்த ஒப்பிடமுடியாத கண்ணோட்டங்களை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. டைம்ஸ் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான ET NOW, இந்தியாவின் முதன்மையான ஆங்கில வணிக செய்தி சேனலாகும். “Rise with India” என்ற குறிக்கோளுடன் வழிநடத்தப்படும் இந்த சேனல், சந்தைகள் மற்றும் நிதியைத் தாண்டி பொருளாதாரம், கொள்கை மற்றும் மேம்பாடு குறித்த கூர்மையான தகவல்களை 16 நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்கு வழங்கி சென்று சேர்க்கிறது.
“The Market”, “First Trades” மற்றும் பிற்பகல் நிகழ்ச்சியான “Closing Trades” போன்ற அதன் பிரத்யேக நிகழ்ச்சிகள் மூலம், ET NOW சந்தையின் மேக்ரோ மற்றும் மைக்ரோ போக்குகள் குறித்த நிபுணர் பகுப்பாய்வை வழங்குகிறது. அத்துடன் சந்தை நுண்ணறிவு மற்றும் தகவலறிந்த முடிவெடுப்பதற்கான நம்பகமான வழிகாட்டியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. இனி ஒவ்வொரு வார நாளிலும் மாலை 5:30 மணிக்கு ‘South Central’ மற்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 3:30 மணிக்கு ‘The Interview with Ayesha Faridi’ ஆகியவற்றை ET NOW இல் காணுங்கள்.
About Times Network
TIMES NETWORK, a premium broadcast network is part of India’s largest media conglomerate, The Times Group. Times Network with its credo “Now or Nothing”, takes the centre stage in influencing the influencer, by delivering the most compelling and irreplaceable content to over 200 million urban affluent viewers in India and is available in over 100 countries across the globe. It houses best in class English and Hindi News channels including; Times Now, ET Now, Times Now Navbharat, ET Now Swadesh; Hollywood channels - MN+; Romedy Now; MNX; Bollywood channel - Zoom, Times Influence and The Zoom Studios – an original content creator that brings stories to life with relatable and compelling narratives. The digital entities of the Network, including Timesnow.in, ETNow.in, TimesNowNavbharat.com, Zoomtv.com, ETNowSwadesh.com, Digit.in, TimesFoodie.com, Times Drive, and Telly Talk are seamlessly adapted to serve the diverse nature and interests of the content-savvy internet audience.
About The Times Group
The Times Group is the leading media conglomerate in India with premium offerings across diverse businesses such as Television, Digital, Print, Radio, Outdoor Media, Events, Music, Films, Real Estate Marketplace, Higher Education and Executive Education. As India’s most influential news and entertainment content provider, it houses some of the country’s leading brands such as Times Now, ET Now, Times Now Navbharat, ET Now Swadesh; Zoom; MN+; Romedy Now; MNX, Mirchi, Gaana, Magicbricks, Junglee Pictures, Times OOH, Times Music, Junglee Music, Filmfare, Femina, Grazia, Times Influenc and ET Edge, among others. The Times Group’s Bennett University and TimesPro are fast taking leadership positions in the higher education and executive education categories respectively and it has recently diversified into global sports through a joint venture for the world’s fastest growing sport of pickleball.
The digital entities of the Network produce and curate content for digital audiences across the world with a 4 billion monthly reach through its multiple brands, including timesnow.in, etnow.in, timesnownavbharat.in, zoomtv.com, etnowswadesh.com, digit.in, timesfoodie.com, healthandme.com, timesdrive.in, and Telly Talk.
MEDIA CONTACTS: TIMES NETWORK
Ahana Ganguly
Associate Vice President
ahana.ganguly@timesgroup.com
Manthra Koliyer
Senior Executive – PR
manthra.koliyer@timesgroup.com

