M.G.R MOVIE POOJA PHOTOS & PRESS NOTE

 

எம். ஜி. ஆர். அவர்களின்வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’என்னும் பெயரில் திரைப்படமாகத்தயாரிக்கப் படுகிறது.

தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தலைமையில் திருவள்ளூர்பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் அமைச்சர் .கே. பாண்டியராஜன்முன்னிலையில் முதல்வர் எடப்பாடிகே. பழனிச்சாமி அவர்கள்இத்திரைப்படத்தின் முதல்நாள்படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

செய்தி, மக்கள் தொடர்புத்துறைஅமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும்அமைச்சர்கள், பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,திரைத்துறை பிரபலங்கள்இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஆகசதீஷ்குமார், பேரறிஞர்அண்ணாவாக இயக்குனர் எஸ்.எஸ். ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி,பிளாக் பாண்டி, ஏ. ஆர்.தீனதயாளன், முத்துராமன் மற்றும்பலர் நடிக்கின்றனர். முன்னாள்முதல்வர்கள் வி. என். ஜானகி, ஜெ.ஜெயலலிதா ஆகியோருக்கானஉருவ ஒற்றுமையுள்ளநடிகைகளின் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.

‘காமராஜ்’   திரைப்படத்திற்குதிரைக்கதை வசனம் எழுதியசெம்பூர் ஜெயராஜ்இத்திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.படத் தொகுப்பு, எஸ். பி. அகமது, ஏ .எம். எட்வின்  சகாய் ஒளிப்பதிவுசெய்ய, ரமணா கம்யூனிகேஷன்ஸ்சார்பாக அ. பாலகிருஷ்ணன்தயாரித்து இயக்குகிறார்.   

புரட்சித்  தலைவர் எம். ஜி. ஆரின்திரைப்படங்கள் துவக்க நாளன்றே,அனைத்து ஏரியாக்களும்விற்பனையாவது வழக்கம். அந்தமரபின் அடையாளமாக ஆனந்தாபிக்சர்ஸ் உரிமையாளர் திரு.சுரேஷ் அவர்கள் ஒருதியேட்டருக்கான விநியோகஉரிமையை பெற்றுக் கொண்டார்.இத்திரைப்படம்,உலகெங்கிலுமுள்ள தமிழர்களைசென்றடைய எம். ஜி. ஆரின் தீவிரபக்தர்களுக்கு அந்தந்த பகுதிதிரையரங்குகளில் திரையிட விநியோக உரிமை வழங்க ரமணாகம்யூனிகேஷன்ஸ்திட்டமிட்டுள்ளது.

எம். ஜி. ஆரின் நூற்றாண்டுவிழாவினை முன்னிட்டுதயாரிக்கப்படும்இத்திரைப்படத்தின்  டீசர், எம். ஜி.ஆரின் பிறந்த நாளான வரும்ஜனவரி 17 அன்றுவெளியிடப்படும்.    வரும் ஏப்ரலில்இத்திரைப்படம் திரைக்குவருகிறது.  

                                                                                       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *