






“ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாய நிலங்களில் செய்யும் அறுவடையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, கடல் வாழ்வையும் சார்ந்திருக்கிறது. சமீப காலங்களில், மீன் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திந்திருக்கிறது, அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இது வளர்ந்து வருகிறது. குப்பத்து ராஜா தயாரிப்பாளர் சரவணன் இதை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை நம் முன் வைக்கிறார்.
“இரண்டு மாதங்களுக்கு முன், பெசன்ட் நகரில் படகு பந்தயம் நடத்துவதற்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக பெருங்கடல் விழிப்புணர்வு குழுவை சார்ந்த சில நபர்கள் எங்களை சந்தித்தனர். விரிவான கலந்துரையாடல் மூலம், கடந்த 4-5 ஆண்டுகளாக கழிவுப்பொருட்கள் அதிக அளவில் கடலில் கலப்பது தெரிய வந்தது. அங்கு மீன் பிடிக்கும் மீனவர்களின் வலையில் சுமார் 60% பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்தது தெரிய வந்தது. டால்பினின் தொண்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியிருக்கும் வீடியோக்களை காணும்போது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. படிப்படியாக இத்தகைய கழிவு பொருட்கள் அதிகரிப்பது, அந்த பகுதிகளில் மீன் இனப்பெருக்கத்தை பெருமளவில் குறைக்கும். பொதுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மராத்தான் ஏற்பாடு செய்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. எனவே அவர்கள் படகு போட்டி நடத்த முடிவு செய்தனர். அவர்கள் எல்லியட் கடற்கரை தேர்ந்தெடுக்கப்பட முக்கிய காரணம், வட சென்னை என அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம், அவர்கள் ரவுடிகள் என தரக்குறைவாக பார்க்கப்பட்டனர்.
எனவே, இந்த ‘படகுப் பந்தயத்திற்காக’ எங்களால் செய்ய முடிந்த சிறப்பான பங்களிப்பை செய்ய முடிவு செய்தோம். ஐ ட்ரீம்ஸ் தியேட்டர் உரிமையாளர் மூர்த்தி செய்த உதவி மிகப்பெரியது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இந்த நிகழ்வில் பங்கு பெற்றதோடு, மேலும் இத்தகைய நடவடிக்கைகளை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் கூறும்போது, “பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் கவர்களை தவிர்ப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. கடைகளில் ஒரு புத்தகம் வாங்கினால் கூட அதை ஒரு பிளாஸ்டிக் கவர் மூடியிருக்கும். நாம் அதை சாலைகளில் தூக்கி வீசக்கூடாது, அதை குப்பை தொட்டிகளில் போடலாம், அல்லது வீட்டிற்கு கொண்டு சென்று அவற்றை அகற்றலாம்” என்றார்.
இந்த நிகழ்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெருங்கடல் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட இந்த குழுவை பற்றிய மேலும் விவரங்களுக்கு, அதன் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை காணலாம்.