சினிமா பைனான்சியர் கொடுத்த புகாரின் பெயரில் கார் புரோக்கார் இளமுருகன் மோசடி வழக்கில் புழல் சிறையில் அடைப்பு!
எண். 18/10 பாஸ்கரா தெரு, சிவா
விஷ்ணு அப்பார்ட்மண்ட், ரங்கராஜபுர த்தில் வசித்து வரும் கார்புரோக்கர் இளமுருகன் மற்றும் அவரது மனைவி மீனா முருகன் ஆகியோர் பல்வேறு மோசடியில் சிக்கியது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் பலபேர்களிடம் செக் மோசடி செய்து பல லட்ச ரூபாயை ஏமாற்றியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சென்னையில் சினிமா பைனான்சியர் அசோக் லோடா என்பவரிடம் கார் வாங்கி தருவதாக கூறி ரூ.7 1/2 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதும், நடிகர் விக்னேஷ் என்பவரிடம் ரூ. 6 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றியதும் 2 லட்சம் செக் கொடுத்து பவுன்ஸ் ஆனதும் தெரிய வந்தது.
பிரபல நடிகை ஜெயசித்ரா வீட்டில் 12 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்த இவர்கள் வாடகை தராமல் வீட்டையும் காலி செய்யமல் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது
போலியான ஆவணங்களை தயாரித்தது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் உத்தரவுப்படி 420 வழக்கில் இளமுருகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.