புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் உதயம்
தமிழ் சினிமாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது. அண்ணாமலை தலைமையிலான நிர்வாகிகள் சங்கத்தை நிர்வகித்து வந்தனர். புதிய நிர்வாகிகளை தேர்தல் வைத்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு உடன்படாத சில விநியோகஸ்தர்கள் தனியாக பிரிந்து புதிய சங்கத்தை உருவாக்கி உள்ளனர். மேலும் சில அரசு கோரிக்கைகளும் நிறைவேறாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டும் புதிய சங்கம் உருவாகி உள்ளது.அதன்படி, புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், துணை தலைவராக சரஸ்வதி முத்தனனும், பொதுச் செயலாளராக பன்னீர் செல்வமும், செயலாளராக சேலம் இளங்கோவும், கூடுதல் செயலாளராக ராம்நாட் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.